விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய*  பாற்கடல் வண்ணா!*  உன்மேல்- 
    கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த*  கள்ள அசுரர் தம்மைச்*
    சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே*  விளங்காய் எறிந்தாய் போலும்* 
    என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்*  அங்ஙனம் ஆவர்களே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பன்றியும் - மஹாவராஹமாயும்;
ஆமையும் - ஸ்ரீகூர்மமாயும்;
மீனமும் - மத்ஸ்யமாயும்;
ஆகிய - திருவவதரித்தருளின;
பால் கடல் வண்ணா - பாற்கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியையுடையவனே;

விளக்க உரை

‘பாற்கடல்வண்ணா’ என்றது-க்ருஷ்ணாவதாரத்தில் நிறத்தைச் சொன்னபடியன்று; ‘பாலின் நீர்மை செம்பொனீர்மை’ என்ற பாட்டிற் சொல்லியபடி-ஸாத்விகர்களான க்ருதயுக புருஷர்களுடைய ருசிக்குத் தக்கபடி திருமேனி நிறத்தை யுடையவனாய்க்கொண்டு அவர்களைக் காத்தருளினவாற்றைச் சொல்லுகிறதென்க; இனி, ‘பாற்கடல்வண்ணா”’ என்று பாடமாகில், பார்[பூமி] சூழ்ந்த கடல் போன்ற [கறுத்த] நிறத்தையுடையவனே! என்று பொருளாய் இவ்வவதாரத்தின் நிறத்தையே சொல்லிற்றாகலாம். கன்றினுருவாகி வந்த அசுரன் [வத்ஸாஸுரன்] ஒருவனாதலால் ‘அசுரன்றன்னை’ என்று ஒருமையாக சொல்ல வேண்டியிருக்க, அங்ஙனஞ் சொல்லாது ‘அசுரர்தம்மை’ என்று பன்மையாகக் கூறினது-பால்வழுவமைதியின் பாற்படுமென்க; “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினுனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்றார் நன்னூலார்; கோபத்தினால் பன்மைப்பால் ஒருமைப்பாலாதலேயன்றி ஒருமைப்பால் பன்மைப்பாலாதலும் உண்டென்பது ஒருசாரார் கொள்கை; சிறியதிருமடலில், “அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போற் கிடந்தானைக் கண்டவளும், வாராத்தான் வைத்ததுகாணாள் வயிறடித்திங், கார்ர்புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால், ஊரார்கள் எல்லாருங்காண உரலோடே, தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப, ஆராவயிற்றி னோடாற்றாதான்” என்றவிடத்து ‘ஐய்யர்’ ‘நீராம்’ என்று ஒருமைப்பால் பன்மைப்பாலாக அருளிச் செய்துள்ளமையும், ‘தீரர்வெகுளியளாய்’’ என்றமையால் இதுக்கு அடி கோபமென்பதும் இங்கு உணரத்தக்கது. “உண்ணிலாவியவைவரால்”” என்ற பதிகத்திலும் மற்றும் பலவிடங்களிலும் ஐம்பொறிகளை ‘ஐவர்’ என உயர்திணையாற் கூறியது, இழிபு பற்றிய திணைவழுவமதி என்றாற்போலக் கொள்க. “கன்றினுருவாகி” என்றதை உபலக்ஷணமாக்கித் தாம்பர்யங் கண்டுகொல்வது; அன்றிக்கே, ஆழ்வாருக்கு கிருஷ்ணனிடத்தில் ப்ரேமாதிசயத்தாலே, வந்த ஒருவனே ஒன்பதாகத் தோற்றி பஹூவசநம் ப்ரயோகித்தார் என்று கொள்ளவுமாம்” என்பர் ஒரு அரும்பதவுரைகாரர். கண்ணபிரானே! உன்னை நலிய வந்த வத்ஸாஸுரனையும் கபித்தாஸுரனையும் அநாயாஸமாக முடித்தவனன்றோ நீ -என்று யசோதைசொல்ல, அவன் ‘ஆம்’ என்ன அதைக்கேட்ட யசோதை மனமகிழ்ச்சி ஒருபக்கத்திலும் வயிற்றெரிச்சல் ஒருபக்கத்திலுமாய் ‘என்னுடைய பிள்ளைக்குத் தீமை செய்யக் கருதுமவர்கள் என்றும் அப்படியே மாளக்கடவர்கள்’’ என்று கைநெரித்துச் சாபமிடுகிறாள் ஈற்றடியில்.

English Translation

O Lord of the Milk Ocean, who came as fish, tortoise and boar, a deceitful Asura came on you in the form of a calf in the grazing grounds. With your little hands you went and caught him, and threw him against a wood-apple tree! That is what happens to those who mean harm to my child!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்