விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பணைத்தோள் இள ஆய்ச்சி*  பால் பாய்ந்த கொங்கை*
    அணைத்து ஆர உண்டு*  கிடந்த இப் பிள்ளை*
    இணைக்காலில்*  வெள்ளித் தளை நின்று இலங்கும்*
    கணைக்கால் இருந்தவா காணீரே*
          காரிகையீர்! வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பணை - மூங்கில்போன்ற;
தோள் - தோள்களையுடையளாய்;
இள - இளமைப்பருவத்தையுடையளான;
ஆய்ச்சி - யசோதையினுடைய;
பால் பாய்ந்த - பால் சொரிகிற;

விளக்க உரை

உரை:1

மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இந்த இளைய ஆய்ச்சியின் பால் நிறைந்த கொங்கைகளை தன் திருக்கைகளால் அணைத்துக் கொண்டு தன் திருவயிறு நிறையும் படி பாலை உண்டு அந்த நிறைவிலும் மகிழ்விலும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிறு பிள்ளையின் இணையான திருக்கால்களில் வெள்ளியணி விளங்கும் கணைக்கால் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று பாருங்கள். அழகில் சிறந்த காரிகையர்களே வந்து பாருங்கள்.

உரை:2

‘‘பணைத்தோளிள வாய்ச்சி’’ என்றது - தன்மையில் வந்த படர்க்கை: ஆய்ச்சியாகிய என்னுடைய என்றபடி. அன்பினால் நெறித்துப் பால் சொரிகிற என் முலையைத் திருக்கைகளாலே அணைத்து வயிறாரவுண்டு மகிழ்ந்துகிடக்கிற இப்பிள்ளையினுடைய கால்களில் வெள்ளித்தண்டை விளங்கா நிற்கிற கணைக்காலின் அழகை வந்து காணுங்கள்.

English Translation

Beautiful Ladies, come here and see, this child sleeps after sucking from the milk-laden breasts of a young slender Gopi of bamboo-like arms. His two feet are adorned by silver anklets.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்