விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர்கின்றது மணி மாமை,*  பிறங்கி அள்ளல் பயலை*
    ஊர்கின்றது கங்குல் ஊழிகளே,*  இது எல்லாம் இனவே- 
    ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்*
    சார்கின்ற நல் நெஞ்சினார்,*  தந்து போன தனி வளமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணி மாமை - (எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது - விகாரப்படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை - விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது - மேன்மேல் பரவாநின்றது;
கங்குல் - இராப்போது

விளக்க உரை

நாயகன் பிரியப்பெற்ற நாயகி தன் ஆற்றமைகூறி நெஞ்சொடு கலாய்த்தல். அன்றிறே, பரங்கியை நோக்கித் தலைமகள் தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாளாகவுமாம். மாதர்க்கு இளமைப் பருவத்திலுள்ள ஒளிபெற்ற நியம் மாமை எனப்படும். தனது மேனிநிறத்தைத் தானே ‘மணிமாமை’ என்று புக்ந்து கூறுதல் தற்புகழ்ச்சி யாகாதோ வெனின், ஆகாது; தன்நிறத்தை அவன் புகழும் விதத்தாலே சொல்லுவதென்க. நாயகனைப் பிரிந்ததனாலே என்னுடைய மேனி நிறம் மாறிப்போயிற்றென்றவாறு. பிறங்கி அள்ளல் பயலை ஊர்கின்றது = பசலைநிறமானது அடர்ந்துகொண்டு மேன்மேலும் பரவத் தொடங்கிற்று என்கை. (பசலைநிறத்தைப் பற்றி கீழ்ப்பாட்டினுரையிற் காண்க.) ‘அள்ளல் பயலை’ என்று பசலை வண்டலிடுந் தன்மையைக் குறிக்குமென்றுங் கூறுவர். கங்குல் ஊழிகளே- நாயகனோடு கூடியிருக்குங் காலத்தில் ஒரு நொடிப் பொழுதாகக் கழிகிற இரவு பிரிவுகாலத்தில் கல்பகோடிகாலமாக நீள்கின்ற படியைக் கூறியவாறு. ‘இதெல்லா மினலே, என்றதனால், அன்றில் தென்றல் திங்கள் கடல் குயில் முதலியவை வருத்துவனவாதலுங் கொள்ளப்படும்.

English Translation

My colour has faded. A sickening paleness has spread over me, this night stretches into an aeon. My heart went after the cool Tulasi wreath of my lord krishna who wields a sharp discus, Alas! This is the big fortune he left me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்