விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயோன்*  வட திருவேங்கட நாட,*  வல்லிக்கொடிகாள்!- 
    நோயோ உரைக்கிலும்*  கேட்கின்றிலீர் உறையீர்*  நுமது-
    வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்-
    ஆயோ?*  அடும் தொண்டையோ,*  அறையோ இது அறிவு அரிதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயோன் - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட - வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள் - பூங்கொடிபோன்ற இளம் பெண்களே!
அது அன்னி - அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும் - கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான

விளக்க உரை

கிளவித்துறையில் இப்பாசுரம் - ‘மதியுடம்படுத்தலுற்ற தலைவன் குறையுறவுரைத்தல்’ எனப்படும். நாயகன் நாயகியோடே ஏதோவொரு விதமாகக் கூடிப்பிரிந்தான்; பிரிந்தபின்பு மறுபடியும் அவளைக்கூட வேண்டி அவளது தோழியினிட் சென்று தனது குறையையறிவித்தும் நிறைவேறப் பெறாதவனாய் இனி என்ன செய்வதென்று ஆலோசித்திருந்தான்; இருக்கையில், நாயகியும் தோழியும் ஒன்றுகூடிப் புனங்காத்திருக்கிற மையம் நேர்பட்டதனால் அவரருகிற் சென்று நின்று புதியவன்போலச் சில வார்த்தைகளைக் கூறித் தன் குறையையறிவித்துத் தோழியை மதியுடம்படுத்துகிறான். மதியுடம்படுத்தல் என்பதும். மதியுடன்படுத்தல் என்பதும் ஒன்றே. அஃதாவது என்னெனில்; நாயகி வேறுபட்டிருப்பதையும் நாயகனாகிய தனது செய்கையையும் தோழியானவள் நோக்கி இவற்றுக்குக் காரணமென்னோவென்று கவலைப்பட்டிருக்கையில், நாயகன் தன்னுடைய கருத்தை அறிவிப்பதனாலே இவற்றின் உண்மைக்காரணம் இன்னதென்று தோழி தெரிந்து கொள்ளும்படி செய்வதேயாம். (மதியை உடன்படுத்தல்- மதியுடம்படுத்தல். மதியாவது கருத்து. தோழியின் கருத்தைத் தனது கருத்தோடு ஒரு வழிப்படச் செய்தல் என்றபடி.)

English Translation

O Creeper-like Dames resemling the vines of the wonder lord's Venkatam hill Despite my pleas, you do not hear my plight, alas! Tell me, is if your speech that hunts me so, or is if your voice? Or is if the "Ay' shout that you give, to drive away the parrots and this woeful me? Alas! This is difficult to understand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்