விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திண் பூஞ் சுடர் நுதி*  நேமி அம் செல்வர்,*  விண் நாடு அனைய-
    வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்,*  இவையோ-
    கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி* 
    வண் பூங் குவளை,*  மட மான் விழிக்கின்ற மா இதழே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண் - வலிய
பூ - அழகிய
சுடர் - ஒளியுள்ள
நுதி - கூர்மையை யுடைத்தான
நேமி - திருவாழியை யுடைய

விளக்க உரை

நாயகன் நாயகியை விட்டுப் பிரியவொண்ணாமையைக் கூறும் பாசுரம் இது. கீழ்ப்பாட்டிற் சொன்னபடி, நாயகன் பிரியப் போகிறானென்பதைக் குறிப்பாலறிந்த நாயகி கூடியிருக்குமந் நிலையிலும் இனி நேரும் பிரிவை நோக்கி ஆற்றமாட்டாமல், பிரிந்த பின்பு உண்டாகவேண்டிய வருத்தத்தை அப்போதே அடைந்திட, அவ்வெழிலையும் வேறுபாட்டையுங் கண்டு தரியமாட்டாத நாயகனுடைய உட்கோளான வார்த்தையென்க. கையுங் திருவாழியுஞ்சேர்ந்த சேர்த்தியாலுண்டாகும் அழகையுடைய எம்பெருமானுடைய பரமபதம்போலச் சேர்ந்தவர் மீளவொண்ணாதபடி எல்லையிலாத ஆனந்தத்தைத் தர வல்லவளாய்க் கொடிபோன்ற இந்த நாயகிளை யார்தாம் பிரிந்து போகக்கூடும்; மனிதர்க்கு உரிய விவேகமுடையார் பிரியமாட்டார். ஏனெனில்; இவளுடைய கண்ணழகைக் கண்டால் இதைவிட்டுப் பிரிந்துபோக யார்க்கேனும் மனம் வருமோ? இவளது கண்கள் மற்றையோருடைய கண்கள்போல ஸாமாந்யமாக இருக்கின்றனவோ? செவ்வரி சிதறுதலில் செந்தாமரைப் பூவையொத்தும், கடைச்விப்பில் செங்கழுநீர் மலரையொத்தும், (அல்லது கருநிறத்தில் கருநெய்தல் மலரையொத்தும்) நான் பிரிந்துபோக முடியாதபடி அழகியதாக நோக்கி என்னைக் கவருந்தன்மையில் மடமான விழியையொத்தும் மேல்இமை கீழ்இமைகளில் பெரிய இதழ்களை யொத்தும் விளங்குகின்ற கண்கள் எனது பிரிவை நினைத்த மாத்திரத்திலும் முத்தருப்பினாற்போலே கண்ணீர் பெருகப் பெறுகின்றனவே!; இப்படிப்பட்ட நிலைமையை இடைவிடாது கண்டுகொண்டிப்பதேயன்றோ கண் படைத்ததற்குப் பலன்; அப்பலனைப் பெறாது பிரிந்துபோக அறிவுடையார் நினைப்பரோ? என்றதாயிற்று.

English Translation

This girl is like a beautiful creeper with flowers as sweet as the excellence of the strong, sharp and radiant discus-bearing weallthy lord of heaven Now who would ever desert such as one? Alas, her dark collyrium-lined lotus eyes shed pearly tears; her eyedlids are like blown petals of the blue lotus, her wide eyes are like that a town, How her lips twitch, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்