விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
    ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்
    கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
    இடம்நாடு காண இனி.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறப்பு இடும்பை - ஸம்ஸாரதுக்கங்களில் நின்றும்
இழிந்தேன் - நீங்கினேன்
அமரர்க்கு - பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை - என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன் - (ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்

விளக்க உரை

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள், ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை. இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார் இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார். அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம். அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை. (கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு“ எனப் படுகிறது. புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

English Translation

Suffering repeated births, I sought your feet, and received such grace as even Brahma does not enjoy. Freed of debt-life and wordly life, I am going to see the supreme world of Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்