விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காப்பு மறந்தறியேன்*  கண்ணனே என்று இருப்பன்* 
  ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை
  கொடுத்து அளித்த*  கோனே குணப்பரனே*  உன்னை 
  விடத்துணியார்*  மெய்தெளிந்தார் தாம். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பல் உயிர்க்கும் - எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும் - சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து - சரீரங்களைக் கொடுத்து
அளித்த - அருள்செய்த
கோனே - ஸ்வாமிந்!

விளக்க உரை

காப்புமறந்தறியேன் என்றதற்கு இருவகையாகப் பொருள் கொள்ள இடமுண்டு. எம்பெருமான் என்னைக் காத்தருளினதை மறக்கமாட்டேன் என்றும், நான் எம்பெருமானுக்குக் காப்பிடுவதை (மங்களாசாஸநம் பண்ணுவதை) மறக்கமாட்டேன் என்றும். ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்குமார்க்கை கொடுத்தளித்த கோனே – பிரளயதசையில் இறகொடிந்த பறவையோலே கரணகளே பரங்களையிழந்து தடுமாறுகின்ற ஆத்மாக்களுக்கு மறுபடியும் கரணகளேபரங்களைக் கொடுத்தமை சொல்லுகிறது. “***“ என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவமுங் காண்க. இவ்வாழ்வார் வாழ்ந்தகாலத்தில் குணபரன் என்னுமோரரசன் இருந்ததாகவும், எம்பெருமானுக்கே ஏற்றிருக்கத்தக்கதான அந்த நாமத்தை அவ்வரசன் தரித்திருப்பது பொருந்தாதென்று அதில் வெறுப்புக்கொண்டு, “அஃது அனந்த கல்யாணகுண பரிபூர்ணனான எம்பெருமானுக்கெ உரியதாம்“ என்ற திருவுள்ளத்தை வெளியிட வெண்டி இப்பாசுரத்தில் “கோனே குணபரனே“ என்று எம்பெருமானை இவர் அழைத்திருப்பதாகவும் இக்காலத்துச் சில ஆராய்ச்சிக்காரர். கூறுகின்றனர். இக்கூற்றின் பொருத்தமின்மையைத் தனிப் புத்தகத்தில் விரித்துரைப்போம் நிற்க. மெய்தெளிந்தார்தாம் உன்னை விடத் துணியார் – உன்னோடுண்டான உறவையும் உனது அரிய பெரிய திருக்குணங்களையும் உள்ளபடி உணருமவர்கள் உன்னை விடமாட்டார்கள் என்றவிதனால் தாம் எம்பெருமானை விடமாட்டாமையைத் தெரிவித்தாராவர்.

English Translation

I cannot forget the protection the lord offers. Krishna is all know. For all the souls in the deluge, he offers his corpus for protection. O King! O Benevolent One! Realised souls will never think of leaving you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்