விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றும் மறந்து அறியேன்*  என் நெஞ்சத்தே வைத்து* 
    நின்றும் இருந்தும் நெடுமாலை*  என்றும்
    திருஇருந்த மார்பன்*  சிரீதரனுக்கு ஆளாய்* 
    கருஇருந்த நாள்முதலாக் காப்பு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆள் ஆய் - ஆட்பட்டவனாய்
நெடு மாலை - (அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து - என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து - ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும் - நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்

விளக்க உரை

நான் கர்ப்பவாஸம் பண்ணும்போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரக்ஷித்துக் கொண்டு வருகையாலே ஒரு காலும் நான் அவனை மறந்தறியேனென்கிறார். இவ்வாழ்வார் கீழ்க்கழிந்த காலங்களில் பல சமயங்களிலும் புகுந்து பல தெய்வங்களையும் வழிப்பட்டவரா யிருந்து வைத்து, திருமாலை ஒரு நாளும் மறந்தறியேனென்று சொல்வது பொருந்துமோ? என்று சங்கிப்பர் சிலர் உண்மை கேண்மின், எம்பெருமானுக்கு ஆட்பட்டிருக்குந் தன்மையானது ஸகல ஆத்மாக்களுக்கும் இயற்கையாகவே யுள்ளது, ஊழ்வினையின்பயனாக அவ்வடிமையை இடையில் இழந்திருந்து ஒரு காலவிசேஷத்தில் ஏற்றுக் கொண்டாலும் 1. “அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்க்கோ னபிமாதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப் பழவடியேன்“ என்றாறர்போலே அடிமை அநாதியாகவே உள்ளதாக அநுஸந்திக்கக் குறையில்லை. மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கியிருந்து ஒரு நாளளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்கையென்னத் தட்டில்லையே. இடையில் அடிமையை இழந்திருந்த்தற்கு வயிறெரிந்து “பழுதே பல பகலும் போயின வென்றஞ்சியழுதேன்“ என்றும் “பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோ யொழிந்தன நாள்கள்“ என்றும் பேசுவர்கள். இவ்வாழ்வார்தாமே திருச்சந்த விருந்தத்தில் “அன்றுநான் பிறந்திலேன்“ என்றார். நின்றுமிருந்தும் என்றது எல்லா நிலைமைகளிலு மென்றபடி. “நிற்கும்போது மிருக்கும்போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும் நராயணா! என்றால் உங்கள் தலையில் இடிவிழுமோ?“ என்றானாம் ப்ரஹ்லாதன்.

English Translation

Becoming a devotee of Sridhara, the lord with Sri on his chest, I have kept the adorable lord in my heart, never forgetting him for a moment, sleeping or waking,. Since my life in the womb, I have been protected.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்