விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பழுதுஆகாது ஒன்று அறிந்தேன்*  பாற்கடலான் பாதம்* 
  வழுவா வகை நினைந்து*  வைகல் தொழுவாரைக்*
  கண்டு இறைஞ்சி வாழ்வார்*  கலந்த வினைகெடுத்து* 
  விண்திறந்து வீற்றி இருப்பார் மிக்கு. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாழ்வார் - வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து - ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
வின் திறந்து - பரமபதவாசலைத் திறந்து
மிக்கு - சிறப்புடனே
வீற்றிருப்பார் - எழுந்தருளியிருக்கப்பெறுவர்

விளக்க உரை

எம்பெருமானை நேரே ஆச்ரயிப்பதிற்காட்டிலும் பாகவதர்களைப் பணிதல் பாங்கு என்கிற பரமரஹஸ்யார்த்தத்தை வெளியிடும் பாசுரம் இது. இவ்வர்த்தத்தைக் கீழ் “மறாயதானவனை“ என்ற பதினெட்டாம்பாட்டிலும் காட்டியருளினர். அடுத்த மேற்பாட்டிலுங்காட்டுவர். “***“ ஸித்திர்ப் பவதி வா நேதி ஸம்சயோச்யுதஸேவிநாம், ந ஸம்சயோஸ்தி தத்பக்தபரிசர்யாரதாத்மநாம்“ (எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹ முண்டு, பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப்படாமல் மார்வில் கைவைத்து உறங்கலாம்) என்கிறபடியே, கருமங்களுக்கிணங்க ஸம்ஸாரியாக்கவும் அருளாக்கிணங்க ஸம்ஸாரநிவ்ருத்தியைப் பண்ணித் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளவும் வல்ல ஸ்வதந்த்ரனான ஈச்வரனைப் பற்றுகையானது ஸம்ஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராப்திக்கும் பொதுவாயிருக்கும், அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பாயிருக்குமென்று தேர்ந்தவராகையாலே பாட்டுத் தொடங்கும் போதே ‘பழுதாக தொன்றறிந்தேன்‘ என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார். ஸ்ரீவசநபூஷணத்தின் முடிவில் – “பழுதாகா தொன்றறிந்தே னென்கிறபாட்டைப் பூர்வோபாயத்துக்கு ப்ரணமாக அநுஸந்திப்பது. நல்லவென்தோழி, மாறாயதானவனை என்கிற பாட்டுக்களை... இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்திப்பது“ என்றருளிச் செய்துள்ள இரண்டு ஸூத்ரங்களை நோக்குமிடத்து, கீழ்ப் பதினெட்டாம் பாசுரத்திற்கும் இப்பாசுத்திற்கும் விஷயபேதம் விளங்கும். அந்த நுட்பமான விஷயங்களை ரஹஸ்ய ப்ரஸ்தாநங்களிலே ஆராய்ந்து கொள்வது நன்று. ஸ்ரீவசநபூஷணத்தின் முடிவில் – “பழுதாக தொன்றறிந்தே னென்கிறபாட்டைப் பூர்வோபாயத்துக்கு ப்ரமாணமாக அநுஸந்திப்பது. நல்லவென்தோழி, மாறாயதானவனை என்கிற பாட்டுக்களை .... இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்திப்பது“ என்றருளிச் செய்துள்ள இரண்டு ஸூத்ரங்களை நோக்குமிடத்து, கீழ் பதினெட்டாம் பாசுரத்திற்கும் இப்பாசுரத்திற்கும் விஷயபேதம் விளங்கும். அந்த நுட்பமான விஷயங்களை ரஹஸ்ய ப்ரஸ்தாநங்களிலே ஆராய்ந்து கொள்வது நன்று. பாற்கடலான் பாதத்தை கண்டிறைஞ்சுகை யன்றியே பாற்கடலான் பாதந்தொழுவாரைக் கண்டிறைஞ்சுவர் நல்வாழ்ச்சி பெறுவர் என்றதாயிற்று.

English Translation

I have learnt an undying truth, Those who worship the feet of devotees who firmly worship the feet of the Milk-ocean-Lord everyday, will be rid of their strongest Karmas, and have the doors of Vaikunta thrown open to them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்