விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
    குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
    கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
    அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடி ஆர் - (மலர்களின்) பரிமளம் நிறைந்த;
பொழில் - சோலைகளையுடைய;
அணி - அழகிய;
வேங்கடவா - திருவேங்கடமலையி லெழுந்தருளியிருப்பவனே;
போர் - யுத்தஞ்செய்ய முயன்ற;

விளக்க உரை

கண்ணபிரானே நீ கன்றுமேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நான் முன்னமே நினத்துக் ‘குடையையுஞ் செருப்பையுங் கொள்’ என்று வேண்டியும் அவற்றை நீ கொள்ளவில்லை. அங்குமிங்குஞ் சிதறியோடுங் கன்றுகளை நீ இருந்தவிடத்திலிருந்துகொண்டே வேய்ங்குழலை யூதியழைத்துக் கிட்டுவித்துக் கொள்வதற்காக அவ்வேய்ங்குழலையுங் கொடுக்கக் கொண்டிலை; நீ சென்றவிடமோ மிகவும் தீக்ஷ்ணமான! காட்டுநிலம்; காலிற்செருப்பில்லாமையாலே செங்கமலவடிகள் வெதும்பிப்போயின; மேல் குடையில்லாமையாலே கண்கள் சிவந்தன; இங்குமங்குந் திரியாமல் இருந்தவிடத்தேயிருந்து கன்றுகளை மேய்க்கக் குழலிலாமல் தட்டித் திரியும்படியால் உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் நோக்கக் கடவதோயென்று வயிறுபிடிக்கிறாள். தருவிக்க என்பதற்கு கொடுக்க என்று தன் வினைப் பொருள் கொள்க. போனாய் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல், போனவனே! என விளியாகக் கொள்ளலுந் தகுமெனக் கொள்க. கண்கள் சிவந்தாய்- “சினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்” என்ற நன்னூற் சூத்திரமுணர்க.

English Translation

O Lord of fragrant bowered Venkatam hills, my dark angry bull! You asked for you favourite umbrella, sandals and flute, then ran away without them, to graze your dear calves. Little Child, the soles of your petal-soft feet are scorched. Your eyes are blood-shot by the blaze of the Sun, see you are exhausted. O My Master!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்