விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேந்தர்ஆய் விண்ணவர்ஆய்*  விண்ஆகி தண்ணளிஆய்* 
    மாந்தர்ஆய் மாதுஆய்*  மற்று எல்லாம்ஆய்*  சார்ந்தவர்க்குத்
    தன்ஆற்றான் நேமியான்*  மால்வண்ணன் தான் கொடுக்கும்* 
    பின்னால்தான் செய்யும் பிதிர்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண்ணளி ஆய் - அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய் - மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால் - இவ்வளவுக்குமேலும்
தன் கொடுக்கும் - தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர் - (இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்

விளக்க உரை

ஆச்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்தருணுளும் உபகார பரம்பரைகளையும் எத்தனை உபகாரங்கள் செய்தாலும் அவன்றான் த்ருப்தியடைவது மில்லையென்கிற திருவுள்ளத்தினகலத்தையும் அருளிச்செய்கிறார். வேந்தராய் – சிறியவனைப் பெரியவன் நலியாதபடி நோக்குகின்ற அரசர்களாயிருந்து கொண்டு ரக்ஷிப்பவன் எம்பெருமானே என்றவாறு. “***“ (விஷ்ணுவின் அம்ஸமன்றி அரசனாகயிருக்க முடியாது) என்றது காண்க. 1. “திருவுடைமன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்“ என்ற திருவாய் மொழியின் கருத்து முணர்க. விண்ணவராய் – நாம் இம்மண்ணுலகில் வாழும்வரையில் நமக்கு இன்றியமையாத உணவுப்பொருள்கட்கு வேண்டிய மழை முதலியவற்றை யளிக்கும் வருணன் முதலிய தேவர்களாயிருந்து கொண்டு காத்தருள்பவனும் எம்பெருமானே என்றவாறு. விண்ஆகி –இந்நிலத்திலிருந்துகொண்டு அநுஷ்டித்த புண்ணியங்களுக்குப் பலனான ஸ்வர்க்காநுபவங்களை யளிப்பவனும் தானே என்றவாறு. தண்ணளியாவது கிருபை. எல்லா உபகாரங்களுக்கும் பொதுவானது. பின்னடிகளின் அந்வயக்ரமம் வேறு வகையாகவும் அமையும் கருத்து பதவுரையில் விரிந்ததே.

English Translation

The adorable discus-wielder lord graces those who seek him by delivering to each, his own heart's desires. His cool grace comes through kings, gods, people, friends, mother and several others. In all of whom, it is his hidden hand that gives.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்