விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலந்தான் என் உள்ளத்து*  காமவேள் தாதை* 
    நலம்தானும்*  ஈதுஒப்பது உண்டே*  அலர்ந்தலர்கள்
    இட்டுஏத்தும்*  ஈசனும் நான்முகனும்*  என்றிவர்கள் 
    விட்டுஏத்த*  மாட்டாத வேந்து.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேந்து - தேவாதிதேவன்
என் உள்ளத்து - எனது நெஞ்சிலே
கலந்தான் - சேர்ந்து கொண்டான்
நான்முகனும் - பிரமனென்ன
என்ற இவர்கள் - என்கிற (சிறந்த) தேவர்களும்
 

விளக்க உரை

நான் பெற்ற நன்மை வேறு யாரும் பெறமுடியாது, இதுவரையில் நான் பெற்ற நன்மைகளுள் இப்போது பெற்ற நன்மைக்கு ஈடானதும் வேறொன்றில்லை, அரன் அயன் என்னும் படியான மேம்பட்ட தெய்வங்களாலும் துதித்துத் தலைக்கட்டப் போகாத பெரும்புகழ் படைத்த பெருமான் என் உள்ளத்தோடு ஒரு நீராகக் கலந்து கொண்டானே! இஃது என்ன நன்மை! என வியக்கிறார். காமவேள் தாதை – மன்மதனுடைய அம்ஸமாகிய பிரத்யும்நனுக்கு கண்ணபிரான் தந்தையாதல் அறிக. ‘காமன்‘ என்பது வடசொல் ‘வேள்‘ என்பது தமிழ்ச் சொல், இரண்டையும் சேரப் பிரயோகித்த விடத்து ஒரு சொல்லை விசேஷணமாகவும் மற்றொன்றை விசேஷ்யமாகவுங் கொள்ளலாம், ஆசையை விளைக்குமவனான மன்மதன் என்க தாதை –தாத அலர்ந்த + அலர்கள், அலந்தலர்கள், தொகுத்தல், ‘என்றிவர்கள்‘ என்றிவிடத்து மிதுவே.

English Translation

Even Siva and Brahma offer flowers and worship, but can never praise the lord's glories fully, He is Madana's father. He is my heart, can there be a better fortune than this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்