விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டு வணங்கினார்க்கு*  என்னாம்கொல்*  காமன் உடல் 
    கொண்ட*  தவத்தாற்கு உமைஉணர்த்த*  வண்டுஅலம்பும்
    தார்அலங்கல் நீள்முடியான்*  தன் பெயரே கேட்டிருந்து*  அங்கு 
    ஆர்அலங்கல் ஆனமையால் ஆய்ந்து. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உமை - (மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த - தெரிவிக்க,
அங்கு - அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை - மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால் - ஆராய்ந்து பார்க்கில்,

விளக்க உரை

எம்பெருமானுடைய திருநாமத்தை யாத்ருச்சிகமாகக் கேட்கப்பெற்ற பரமசிவன் விகாரமடைந்ததே வாசாமகோசரமென்றால் எம்பெருமானை ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப்பெறுமவர்கள் படும்பாடு சொல்லக்கூடியதோ? என்கிறார். திருவாய்மொழியில், (6-7-3) உண்ணுஞசோறு பருகு நீரில் மூன்றாம்பாட்டில் “கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ“ என்றவிடத்து ஈடுமுப்பத்தாறாயிரப்படி திவ்யஸூக்திகள் உற்று நோக்கத்தக்கன, (அவற்றை இங்கு அநுவதிப்போம்.) “(என்செய்யுங்கொலோ). சொல்லமாட்டாள், தவிரமாட்டாள், அழாடிதாழியமாட்டாள், எங்ஙனே படுகிறாளோ!. நம்மையும் பிறரையும்விட்டு அவன் திருநாமங்களை யநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றோம், அவன்றன்னையே கண்டு அநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றிலோமே! அநுஸந்தாத வேளையிற்போலன்றிறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் ‘காமனுடல்கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த வண்டலம்புந் தாரலங்கள் நீண்முடியான்றன் பெயரே கேட்டிருந்து அங்காரலங்கலானமையால் –கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்! என்றிறே யிருப்பது“. பரமசிவனுக்குப் பார்வதி பகவந்நாமத்தை யுணர்த்தினவிதம் அவ்விடத்து அடையவளைந்தா னரும்பதவுரையிற் காணப்படுகின்றது. –ஒருகால் ருத்ரன் த்யாநபரனாயிருக்கக்கண்ட பார்வதி யானவள் ‘எல்லாரும் உம்மை உபாஸநைபண்ணாநிற்க நீர் யாரை உபாஸிக்கின்றீர்? உமக்கும் உபாஸ்ய விஷயம் ஒன்றுண்டோ? என்று கேட்டாளாம் இப்படி இவள் கேட்டதற்குப் பரமசிவன் “ஸ்ரீமந்நாராயணனை உபாஸிக்கிறேன்“ என்று மறுமொழி கூறவேண்டி அத்திருநாமத்தை ஸ்மரித்தமாத்திரத்திலேயே ‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்‘ என்றும் ‘உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேனுடம்பெலாங் கண்ணநீர்சோர‘ என்றுஞ் சொல்லலாம்படி விகாரமடைந்தானாம். உமை உணர்த்த –‘நீர் யாரை உபாஸிக்கிறீர்? என்கிற கேள்வி வியாஜத்தாலே பகவந்நாமங்களைச் சிவபிரானுக்குப் பார்வதி உணர்த்தினளென்க. இந்த ப்ரஸங்கத்தால் பகவந்நாமங்களை ஸ்மரிக்கப்பெற்ற சிவபிரான் செங்கண்மால் நாமங்களைச் செவிக்கின்பமாகக் கேட்க விரும்பி அப்பார்வதியையே பாடச்சொல்ல, அப்படியே அவள்பாட, தென்றலும் சிறுதுளியும் பாட்டாற்போலே இனிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது உள்குழைந்தானென்ப.

English Translation

Siva who burnt Madana to ashes become motionless when he heard uma sing the names of the bee-humming Tulasi-wreathed lord-wreathed lord. How much more can happen if one offers worship and sings as well!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்