விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாக்கொண்டு*  மானிடம் பாடேன்*  நலம்ஆக 
    தீக்கொண்ட*  செஞ்சடையான் சென்று*  என்றும் பூக்கொண்டு
    வல்லவாறு*  ஏத்த மகிழாத*  வைகுந்தச் 
    செல்வனார்*  சேவடிமேல் பாட்டு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைகுந்தம் செல்வனார் - ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு - திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு - நாவினால்
மானிடம் - மனிதர்களை
பாடேன் - பாடமாட்டேன்

விளக்க உரை

எம்பெருமானொருவனையே துதிப்பதற்கென்று படைக்கப்பட்ட நாவைக் கொண்டு அற்ப மனிதர்களைக் கவிபாட மாட்டேனென்று தமது உறுதியை வெளியிடுகின்றார். சடைமுடியனானவற்றைக் கொண்டு ஆராதித்து அநுவர்த்தித்தாலும் நித்யஸூரிஸேவ்யனான தனக்கு இது ஒரு பெருமையன்றாகையாலே இதனால் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாத ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல் தகாது என்றதாயிற்று. இவ்வாழ்வார் காலத்தில் வாழ்ந்த இவரது சிஷ்யரான கணிகண்ணன் வாக்கினால் தான் ஒரு பாடல் பெறக்கருதிப் பெருமுயற்சி செய்தும் பெற்றிலனென்பத இவ்வாழ்வார்வைபவத்தில் விரியும். சிஷ்யருடைய உறுதியே அங்ஙனிருக்கும்போது ஆசாரியரான இவரது உறுதியைப் பற்றிச் சொல்லவேணுமோ?

English Translation

I shall not sing the glories of mortal men. My songs are addressed to the feet of my wealth-Lord whom even the fire-bearing mat-haired Siva, taking fresh flowers to Vaikunta, praises to the best of his ability and fails.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்