விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பதிப்பகைஞற்கு ஆற்றாது*  பாய்திரை நீர்ப் பாழி* 
  மதித்துஅடைந்த வாள்அரவம் தன்னை*  மதித்துஅவன்தன்
  வல்ஆகத்து ஏற்றிய*  மாமேனி மாயவனை* 
  அல்லாது ஒன்று ஏத்தாது என் நா.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடைந்த - வந்துபற்றின
வாள் அரவம் தன்னை - ஒளிபொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து - ஆதரித்து
அவன் தன் - அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய - வலிமைதங்கிய சரீரத்திலே ஏறவிட்டவனும்

விளக்க உரை

ஆச்ரிதரக்ஷணம் பண்ணுவதில் வல்லவனான எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோர்க்கு அடிமைப்படலாகா தென்கிறார். அஞ்சிவந்து அடிபணிந்த ஸுமுகனுக்கு அபய மளித்த வரலாற்றை இப்பாட்டிலருளிச் செய்கிறார். தேவந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலியென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத் தகுந்த வரனைத் தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பலவுலகங்களிலுஞ் சென்று கடைசியாகப் பாதாளலோகத்தில் போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து ஸுமுக னென்னும் நாக்குமாரனைக் கண்டு அவனது அழகு குணம் முதலியவற்றிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளை மணம் புரிவிக்க வுத்தேசித்து அவனது பிதாமஹனான ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும் ஏககாலத்தில் கொண்டவனாகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று சொல்லியிருக்கிறானாதலால் இவனுக்கு இப்போது துவிவாஹம் நடத்துவது உசிதமன்று‘ என்று தெரிவித்தான். அதற்கு மாதலி ‘இவன் என்னோடு வநது தேவேநதிரனைக் காணட்டும், இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனால் கேடுவராமல் தடுக்க முயல்வேன்‘ என்று சொல்லி அச்சுமுகனை உடனழைத்துக் கொண்டு சென்று உபேந்திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர்மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க, அதுகேட்ட உபேந்திரனான ஸ்ரீமஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருத்தைத் தரலாம், அதனால் இஷ்டஸித்தி உண்டாகும்‘ என்று சொல்ல, இந்திரன் கருடனுடைய பராக்ரமத்தை நினைத்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸுமுகனுக்கு நீண்ட ஆயுளை மாத்திரம் வரமாக அளிக்க, உடனே மாதலி அச்சுமுகனுக்குத் தன் மகளை மணஞ்செய்வித்தான், இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் இந்திரனோடு மாறுபட்டுத்தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டூரமாகப் பேசுகையில், ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்புவடிவமாயத் திருமாலினருகிற் சேர்ந்து அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி ‘ஸகலதேவர்களினுள்ளும் மஹா பலசாலான வுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையால் சுமக்கின்ற என்னைவிட வலிமையுடையார் யார்? இதனை சற்று ஆலோசியும்‘ என்று கருவங்கொண்டு பேச கடூரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னை மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆத்மஸ்துதி செய்து கொண்டது போதும், மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே, யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக் கொண்டு உன்னையுமல்லவோ வஹிக்கிறேன் எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்குவையா? என்று சொல்லித் தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்த மாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கித் துதித்து அபராதக்ஷாமணஞ்செய்து கொள்ள, திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனென்ற நாகத்தை யெடுத்துக் கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை‘ என்று குறிப்பிக்க அது முதலாக ஸுமுகனோடு கருடன் ஸநேஹங் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா? என்று க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற உபாக்கியானம் இங்கு அறியத்தக்கது. முதல் திருவந்தியில் “அடுத்த கடும் பகைஞற்கு“ என்ற பாட்டிலும் பெரிய திருமொழியில் (5-8-4) “நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவலவம்“ என்றபாட்டிலும் இந்த இதிஹாஸம் அருளிச்செய்யப்பட்டனமையுங் காண்க.

English Translation

Other than the wonder Lord, my tongue will not praise anyone. When Garuda's sworn enemy Sumukha clung to the lord's bedstead seeking refuge, the lord gave the serpent into the hands of Garuda himself, -for safe upkeep, -who wore it on his arms.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்