விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரே அறிவார்8  அனைத்து உலகும் உண்டுஉமிழ்ந்த* 
    பேர்ஆழியான் தன் பெருமையை*  கார்செறிந்த
    கண்டத்தான்*  எண்கண்ணான் காணான்*  அவன் வைத்த 
    பண்டைத் தானத்தின் பதி. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெருமையை - மஹிமையை
அறிவார் ஆரே - அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த - அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி - பரமபதமார்க்க மென்னத் தகுந்த சரமச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான் - நீலகண்டனான சிவனும்

விளக்க உரை

எம்பெருமானுடைய பெருமையை பரமசிவன் பிரமன் முதலான பெருந்தகையாளர்களே அறியாதபோது மற்றையோர் அறிகைக்கு என்ன ப்ரஸக்தியென்கிறார். அனைத்துலகுமுண்டுமிழ்ந்த ரோழியானுடைய பெருமையாவது யாதெனில்? ‘அவன் உபாயமாகுமிடத்து வேறொரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூர்ணோபாயமா யிருந்துகொண்டு காரியம் தலைக் கட்டவல்லவனாகும் பெருமை‘ என்று பட்டர் அருளிச்செய்வராம். பேக்ஷனாயிருந்தனனாகையாலே அன்னவனுடைய பெருமையென்றது நிரபேக்ஷோபாயத்வமே யாகுமென்க. ஸாமாந்யர் நாமுஞ் சில உபாயாநுஷ்டாநம் செய்தாலன்றிக் காரியமாகாது என்றிருப்பர்களே யன்றி, நம் காரியத்தைத் தன் காரியமாக நினைத்துச் செய்பவன் அவனே என்று உறுதி கொள்வார் ஆருமில்லை யென்றவாறு. இவ்வர்த்தத்தையே பின்னடிகளில் விசேஷவ்யக்திகளில் ஏறிட்டுக் காட்டுகிறார். சிவன் விஷத்தையு முட்கொள்ளும்படியான பெருமை வாய்ந்தவனென்றாலும் பேராழியான்றன் பெருமையை யறிவானோ? நான்முகன் எட்டுக்கண்கள் படைத்தவனாயினும் பேராழியான்றன் பெருமையை யறிவானோ? அவன் வைத்த பண்டைத்தானத்தின் பதி காணான் –பதியென்றசொல் வடமொழியில் (“***“ என்று ரூபம் பெறுகிற) சப்தத்தின் விகாரமாகும். மார்க்கம் என்று பொருள். ‘அவன் வைத்த‘ என்ற அடைமொழி பதியில் அந்வயிக்கும். பண்டைத்தானமாவது நித்யவிபூதி. கண்ணபிரான் உபதேசித்தருளின சரமச்லோகத்தின்படி ஸர்வதர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாகப் பற்றினவர்கட்கே பரமபதம் ஸுலபமாதலால் அந்த சரமச்லோகத்தைப் பரமபதத்திற்கு மார்க்கமாகத் திருவுள்ளம் பற்றுகிறார். சிவனும் பிரமனும் சரம ச்லோகத்தையறியார்கள் என்றதற்குக் கருத்து யாதெனில், புறம் புண்டானவற்றை விட்டு அவனையே தஞ்சமாகப் பற்றுகைக் குட்லான ஸ்வரூபவுண்மையை உணரார்கள் என்பதாம்.

English Translation

Who can understand the glories of the discus lord who swallows and remakes the whole Universe? Even the dark throated Siva and the eight-eyed Brahma do not know the path to their ancestral home of Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்