விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சேயன் அணியன்*  சிறியன் மிகப்பெரியன்* 
  ஆயன் துவரைக்கோனாய்*  நின்ற மாயன்*  அன்று
  ஓதிய*  வாக்குஅதனைக் கல்லார்*  உலகத்தில் 
  ஏதிலர்ஆம்*  மெய்ஞ்ஞானம் இல்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓதிய - (திருத்தேர்த்தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச்செய்த
வாக்கு அதனை - (சரமச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார் - அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல் - தத்துவவுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம் - பகவத் விரோதிகளாவர்.

விளக்க உரை

கண்ணபிரான் அர்ஜுநனை வியாஜமாகக்கொண்டு அருளிச்செய்த பகவத்கீதையில் ஸாரமான சரமச்லோகம் இங்கு ‘துவரைக்கோனாய் நின்றமாயன் அன்றோதிய வாக்கு‘ என்பதனால் குறிக்கப்படுகிறது. அதன் பொருளை யறியப்பெறாதவர்கள் தத்துவஞானம் பெறார்கள், தத்துவஞானம் பெற்றவர்களே எம்பெருமானுக்குப் பகைவராவர் என்கிறது. பாரதயுத்தத்து முதனாட்போரில் “உற்றாரையெல்லாம்“ என்றெண்ணி, ஸவதர்மத்தில் அதர்மபுத்தியால் போர்புரியேனென்று காண்டீவம் கைநெகிழத் தேர்த்தட்டின் மீதேதிகைத்து நின்ற அர்ஜுநனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் தத்வோபதேசஞ் செய்து அவனது கலக்கத்தைப்போக்க உபதேசித்ததாதலால் கீதை சிறந்தது. அதில் முதலிலே அர்ஜுநனுக்கு சேஹாத்மவிவேகத்தைப் போதித்து அதன் மூலமாக கர்மயோகம் புருஷோத்தமவித்யை அவதார ரஹஸ்ய்ஜ்ஞானம் முதலியவற்றை உபதேசிக்க, அர்ஜுநன் அந்த எம்பெருமான் உபதேசித்த உபாய விசேஷங்களைக்கட்டு அவை செயற்கரியனவென்றும் ஸ்வரூப விரோதிகளென்றும் வுயாயாங்களீலும் மேபட்ட பிரபத்தியுபாயத்தை யுபதேசிப்பத்து (நீ என்னையே சரணமாகப் பற்றினால் நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிப்பேன், கலங்கவேண்டா) என்று அவனது கலக்கத்தைப் போக்கினது சரமச்லோகத்தினாலென்க. 1. “அறிவினாற் குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி என்கிறபடியே ஸர்வேஜனான ஸர்வேச்வரன் தனது திருவாக்கினின்று உலகத்தார் நற்கதிபெறவேணுமென்ற கருத்தோடு உபநிஷத்துக்களின் ஸாரமாக வெளியிட்டதாதலின் தாத்துவ ஞானத்திற்கு இதுவே சிறந்த ஸாதனமாக. இதனை சிறந்த ஸாதனமாகும். இதனையறியாதவர்கள் ‘மெய்ஞ்ஞானமில் எதிரலாம்‘ என்ன தட்டில்லை. இப்பாட்டில் சேயன் என்பது மிகப்பெரியன் என்பதோடு அந்வயிக்கும், அணியன் பத்து சிறியன் என்பதோடு அந்வயிக்கும், அணியன் என்பது சிரியன் என்பதோடு அந்வயிக்கும். எம்பெருமான் எளியனாயு மிருப்பன் அரியனாயு மிருப்பன் என்றவாறு. ‘ஏதலர்‘ என்றாலும் ‘ஏதிலர்‘ என்றாலும் பகைவர், ஏது இலர் – யாதொரு ஸம்பந்தமுமில்லாதவர் என்கை. ஆகவே பகைவரைக் குறிக்கும். பகவத்கீதையில் என்ற ச்லோகத்தில் ‘த்விஷத‘ என்று அப்பெருமான்றனே சொன்னதைத் திருவுள்ளம்பற்றி இங்கு ‘எதிலராம்‘ என்றனரென்னலாம்.

English Translation

The Lord is very big, the Lord is very small, The Lord is very far, the Lord is very close, -he is the wonder lord, king of Dvaraka, Those who do not learn the worlds he spoke in the war, will remain useless and ignorant forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்