விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூதுஆவது*  என்நெஞ்சத்து எண்ணினேன்*  சொல்மாலை 
    மாதுஆய*  மாலவனை மாதவனை*  யாதானும்
    வல்லவா*  சிந்தித்து இருப்பேற்கு*  வைகுந்தத்து 
    இல்லையோ*  சொல்லீர் இடம்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாது ஆய - அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை - (ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை - திருமாலைக் குறித்து
சொல் மாலை - இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு - ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு

விளக்க உரை

எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல்மாலைகளைச் சொல்லிச் சிந்தித்திருப்பதுதான் நமக்கு உற்றது என்று நான் அத்யவஸாயங்கொண்டேன், இதுவே போதுபோக்காக நானிருந்தால் எனக்குப் பரமபதம் கிடைக்காமாட்டாதோ? கர்மஜ்ஞாநபக்திகளென்னு முபாயாந்தரங்களை அனுட்டிப்பதும் கண்ணைப்புதைப்பதும் மூக்கைப் புதைப்பதுமாயிருந்து உடலை வருத்தி அருந்தொழில் புரிந்தால்தான் பரமபரம் கிடைக்குமென்று பாவிகாள்! நீங்கள் நினைத்திருக்கிறீர்களோ? என்றவாறு. இப்பாசுரத்தின் பின்னடிகளைப் பெரும்பாலு முட்கொண்டே 1.“சிற்றவேண்டா சிந்திப்பேயமையுங் கண்டீர்களந்தோ!...... குற்றமில் சீர்கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே“ என்று நம்மாழ்வாரருளிச் செய்தனரென்னலாம். மாதவனைச் சொல்மாலைகள் கொண்டு யாதானும் வல்லவா சிந்தித்திருக்கிற தமக்கே வைகுந்தமுண்டு, மற்றையோர்க்கு இல்லை என்று தாம் விவக்ஷித்த பொருளை வினாமுறையில் வைத்துரைத்தனரென்க. மாதாய – ‘மாது‘ என்று அழகுப்பெயர், “தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே“ என்னும்படியாக அழகு தானே வடிவெடுத்தவனென்கை. இனி, ‘மாதா‘ என்னும் வடசொல் மாது எனக் கிடப்பதாகக்கொண்டு தாய்போன்றளிப்பவனென்னவுமாம். ‘மாலவனை‘ என்றும் ‘மாயவனை‘ என்றும் பாடபேதம்.

English Translation

I have sung this garland of songs as a means of release. I have been contemplating on the adorable Madhava in ever so many ways. Tell me, is there no place for me in Vaikunta?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்