விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடை நின்று அமரர்*  கழல் தொழுது*  நாளும் 
  இடை நின்ற இன்பத்தர் ஆவர்*  புடைநின்ற
  நீர்ஓத மேனி*  நெடுமாலே*  நின் அடியை 
  யார்ஓத*  வல்லார் அவர்? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் கடை நின்று - (இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றிநின்று
நாளும் - நெடுங்காலம்வரையில்
கழல் தொழுது - (அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெறமாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர் - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே - (இவ்வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல்போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!

விளக்க உரை

எம்பெருமானே! பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்பபலன்களைப் பெற்று அநர்த்தப்படுகின்றனரே யன்றி உன்னையுணர்ந்து ஆச்சரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார். கடைநின்றமார் கழல்தொழுது – அமரர்கடைநின்று கழல்தொழுது என்க. கடையாவது மனைவாசல், தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது – அவர்களை ஆராதித்தமை கூறியவாறு. அன்றியே, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு “கடைநின்ற+அமரர்“ என்று பிரித்து ‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து‘ என்பதாகவும் பொருள் கொள்ளலாம். இடைநின்ற வின்பத்தராவர் – எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக்கூடிய பரமபதா நுபவமொன்றே சிறந்ததாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும், தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட க்ஷுத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்“ எனப்பட்டது. இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். “ஸம்ஜஸார ஸுகமுமின்றிக்கே நிரதிசயமான மோக்ஷஸுகமுமின்றிக்கே ஸ்வர்க்கஸுகத்தையுடையராவர்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

English Translation

Way between, the celestials stand and offer worship with folded hands, and enjoy the fruits of heaven. O Lord eternal, with the hue of the ocean! Who among them can praise your feet fully? Not one.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்