விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தேவராய் நிற்கும் அத்தேவும்*  அத்தேவரில் 
  மூவராய் நிற்கும்*  முதுபுணர்ப்பும்*  யாவராய்
  நிற்கின்றது எல்லாம்*  நெடுமால் என்றுஓராதார்* 
  கற்கின்றது எல்லாம் கடை.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முது புணர்ப்பும் - அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம் - மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில் - அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும் - த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார் - ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந்துணர மாட்டாதவர்கள்

விளக்க உரை

ஸகல தெய்வங்களும் ஸகலபதாரத்தங்களும் ஸ்ரீமந்நாராயணனுக்கு சேஷபூதம் என்றறியமாட்டாதவர்கள் எவ்வளவு விரிவாகக் கற்றாலும் அத்தனையும் பயனற்றவை யென்கிறார். தேவராய் நிற்குமுத்தேவும் நெடுமால், அத்தேவரில் மூவராய்நிற்கும் நெடுமால் புணர்ப்பும் நெடுமால், யாவராய்நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று அறியவல்லாருடைய கல்வியே பயன்பெற்றதாம் என்றவாறு. தேவராய் நிற்குமத்தேவும் – வேதத்தில் கருமகாண்டங்களில் அந்தந்த யாகங்களுக்கு ஆராத்யதேவதையாக அக்நி இந்திரன் வருணன் என்றிப்படி சொல்லப்பட்டுள்ள தேவதைகள் யாவும் என்கிற கருதியின்படி எம்பெருமானுக்குச் சரீர பூதங்களாதலால் அத்தேவதைகட்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே அந்தந்த தேவதா நாமங்களினால் கூறப்பட்டுளன் என்று உணர வேண்டுவது கல்விக்குப் பயன். அத்தேவரில் மூவராய் நிற்கும் மதுபுணர்ப்பம் என்கிறபயே த்ரமூர்த்தியவதார மெடுத்த்தும் திருமாலே. இப்படி பிரித்துபிபிரித்துச் சொல்லுவதுன்? யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமால். என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானுடைய நிலைமை வாய்ந்தவர்களே கற்றுணர்ந்தவராவர் என்கை.

English Translation

All the gods with divinity in them, the Trimurti coming down from yore, and all the sentient beings here, -all these are the lord Nedumai. Those who do not realise this have spent a lifetime learning trash.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்