விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேங்கடமே*  விண்ணோர் தொழுவதுவும்*  மெய்ம்மையால் 
    வேங்கடமே*  மெய்வினைநோய் தீர்ப்பதுவும்*  வேங்கடமே
    தானவரை வீழத்*  தன்ஆழிப் படைதொட்டு* 
    வானவரைக் காப்பான் மலை.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீர்ப்பதுவும் - போக்கடிக்கவல்லதும்
வேங்கடமே - திருமலையே
தானவர் வீழ - அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு - தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை - தேவர்களை

விளக்க உரை

என்கிறபடியே நித்யஸூரிகள் பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவீக்கப்பெற்றாலும் அங்கே பரத்வத்திற்கு உரிய மேன்மைக்குணங்களை அநுபவிகலாயிருக்குமேயன்றி ஸௌலப்யஸௌசீலயங்களுக் குப்பாங்கான எளிமைக்குணங்களை இந்நிலத்திலே வந்து அநுபவிக்கவேண்டியிருப்பதால் அந்த சீலாதிகுணங்களை யநுபவிப்பதற்காகத் திருமலையில் வந்து தொழும்படியைக் கூறுவது முதலடி. ‘வேங்கடம்‘ என்ற திருநாமத்தின் அவயவார்த்தத்தைத் திருவுள்ளம்பற்றி இரண்டாமடி அருளிச்செய்யப்பட்டது. வேங்கட பதத்திற்கு ஸம்ஸ்க்ருத ரீதியில் பொருள் விவரிக்குமிடத்து, வேம்பாவம், கடம் – எரித்தல், பாவங்களை எரிப்பதனால் வேங்கடமென்று பெயர் பெற்றது என்று நிருக்தியுள்ளது. “***“ என்றது காண்க. “வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலை யாதென்று“ என்னும் புராணச் செய்யுளுமுணர்க. திருமலையின் மேற்கிலுள்ள நந்தநபுரமென்னும் ஊரில் புரந்தரனென்னும் ப்ராஹ்மணோத்தமனது குமாரனாகிய மாதவனென்பவன் தன் மனைவியாகிய சந்தர்ரேகையென்பவளோடு பூஞ்சோலையிற் சென்று விளையாடிக் கொண்டிருக்கையில் மாலிநியென்பாளொரு சண்டாள கன்னிகையின் கட்டழகைக்கண்டு காமுற்று அவளைக்கூடி மனையாளைத் துறந்து அப்புலைமங்கையுடனே சென்று புலால் நுகர்ந்தும் கட்குடித்தும் கைப்பொருள் முழுவதையும் இழந்து பின்பு வழிபறித்தல் உயிர்கொலை முதலிய கொடுந்தொழில்புரிந்து பொருள்சேர்த்து அவளுக்குக் கொடுத்துவந்து முடிவில் தரித்ரனாகிப் பலநோய்களை யுமடைந்து அவளால் அகற்றப்பட்டவனாய்ப் பல பாவமுந்தொடரப் பித்தன்போல அலைந்து திரிந்து இத்திருமலையை அடைந்தமாத்திரத்தில் தனது தீவினையெல்லாம் சாம்பலாகப்பெற்று முன்னைய ப்ரஹ்மதேஜஸ்ஸைப் பொருந்தி நல்லறிவுகொண்டு திருமாலைச் சேவித்து வழிபட்டுப் பரமபதமடைந்ததனால் இதற்கு ‘வேங்கடாசலம்‘ என்னும் பெயர் நிகழ்ந்ததென்று வடமொழியில் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்தர புராணத்திலும் கூறப்படுதல் காண்க. இங்ஙனே பல இதிஹாஸங்களுண்டு. திருமலை நோய்தீர்க்கும் விஷயம் இப்போதும் பிரத்யக்ஷமாக அனைவருங் காணத்தக்கதாம். தேவஜாதிக்கு அஸுரஜாதியால் நேருந் துன்பங்களைத் திருவாழியால் தொலைத்துக் காத்தருளுமெம்பெருமான் அப்படியே நம்போன்ற ஆச்ரிதர்களினுடையவும் துன்பங்களைத் தொலைத்தருள எழுந்தருளியிருக்குமிடம் திருமலை என்பன பின்னடிகள்.

English Translation

Venkatam is the hill worshipped by celestials, Venkatam is the medicine for all bodily karmic life, Venkatam is the abode of the discus-wielding Lord who destroys the Asuras and protects the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்