விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அழைப்பன்*  திருவேங்கடத்தானைக் காண* 
  இழைப்பன்*  திருக்கூடல் கூட*  மழைப்பேர்
  அருவி*  மணிவரன்றி வந்துஇழிய* யானை 
  வெருவி அரவுஒடுங்கும் வெற்பு. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரவு - மலைப் பாம்புகளானவை
மழை - மழைபோல் சொரிகின்ற
பேர் அருவி - பெரிய அருவிகளானவை
மணி - அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும் - (அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற

விளக்க உரை

பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம், மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம், அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம். பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம், ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை. அன்றியே, அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம். சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது. “திரையன்பாட்டு“ என்ற ஓர் பழையநூலில் – “கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப், படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“ என்றதனாவ் மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது. “ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல், நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும், “பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும், “இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும் உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது. அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப. யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை, யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.

English Translation

The Ocean-hued lord reserves the six schools of thought for those who do not have the heart to call to him. But they incur his displeasure, neither their gods nor their prayers will be of any avail.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்