விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடையும் செருப்பும் கொடாதே*  தாமோதரனை நான்* 
    உடையும் கடியன ஊன்று*  வெம் பரற்கள் உடைக்*
    கடிய வெங் கானிடைக்*  கால்- அடி நோவக் கன்றின் பின்* 
    கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்*  :எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் பிள்ளையை - என் மகனான;
தாமோதரனை - கண்ணபிரான;,
குடையும் - குடையையும்;
செருப்பும் - செருப்பையும்;
கொடாதே - (அவனுக்குக்) கொடாமல்;

விளக்க உரை

நாட்டிலுள்ள பருக்காங்கற்கள் கதிரவனுடைய எரிச்சலினால் ஒன்று பலவாகப் பிளந்து கூர்மைமிக்கு உள்ளங்காயிலில் உறுத்தி வருத்துமே, வெயிலுக்குத் தடையாகக் குடையையும், தரையின் வெம்மைக்குத் தடையாகச் செருப்பையும் அவனுக்குத் தாராமல் இப்படிபட்ட காட்டிற் போகவிட்டேன், என் கொடுமை யிருந்தவாறு என்னே! என்கிறாள். மேல்திருமொழியில் “குடையுஞ் செருப்புங் குழலுந் தருவிக்கக் கொள்ளாதே போனாய்மாலே”” எனக்காண்கையால் இங்குக் ‘கொடாதே’’ என்பதற்கு அவன் இவற்றை ‘வேண்டா’ வென்று மறுக்கச் செய்தேயும் நான் கட்டாயப்படுத்தி [பலாத்காரமாக] அவற்றைக் கொடாமல் என்று பொருள் விரித்தல் வேண்டுமென்க. பரல்-பருக்கை. கால் அடி-காலின் உள்ளடி.

English Translation

Without even giving him an umbrella and sandals to wear. I sent my Damodara into the blazing hot forest where sharp broken rocks would pierce and hurt his feet. O Heartless me! O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்