விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அகைப்புஇல் மனிசரை*  ஆறு சமயம் 
  புகைத்தான்*  பொருகடல்நீர் வண்ணன்*  உகைக்குமேல்
  எத்தேவர் வாலாட்டும்*  எவ்வாறு செய்கையும்* 
  அப்போது ஒழியும் அழைப்பு.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உகைக்கும் ஏல் - உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது - அப்போதே
எத் தேவர் வாலாட்டும் - எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும் - எவ்விதமான (பஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு - (தேவதைகளின்) ஆஹ்வாகமும்

விளக்க உரை

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு. ‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்‘ என்றாற்போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம், ‘அசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது‘ என்றாற்போலே சொல்லுவது வயதிரேக முகத்தாற் சொல்லுவதாம். கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசுரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும். இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும். எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பலனளிக்கின்றன. என்று திருவாய்மொழிப் பாசுரத்திற்சொல்லிற்று, எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனையும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில். இப்பாட்டிற்கு ப்ரதாநப்ரமேயம் பின்னடிகளே, முன்னடிகள் விசேஷணமாத்ரம். எம்பெருமான் எப்படிப்பட்டவனென்றால், அகைப்பில் மனிசரை ஆறுசமயம் புகைத்தான் – ஆறுசமயங்களாவன – சாக்யர் உலூக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள். இவை அவைதிகங்க ளெனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானாம் எம்பெருமான். இவ்விடத்தில் “போற்றிமற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டுமையின்னே, தேற்றிவைத்தது எல்லீரும் வீடு பெற்றாலுலகில்லை யென்றே“ (4-10-6) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் பொருள் அநுஸந்திக்கத்தகும். உகைக்குமேல் – உகைத்தலாவது உபேக்ஷித்தல், தேவதாந்தரங்களிடத்தில் தான் ஆவசியாத பக்ஷத்தில் என்றபடி. எத்தேவர் வாலட்டும் – பிரமன் உலகங்களைப் படைத்தானென்றும், சிவன் திரிபுரடிமரித்தானென்றும், இந்திரன் வ்ருத்ராஸுரவதம் பண்ணினானென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவமெல்லாம் தெரியுமே, எம்பெருமான் அநுப்ர வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய்திருக்கமுடியுமோ? என்றவாறு. ‘வாலாட்டும்‘ என்றது உலக வழுக்கச்சொல்லின் அநுகாரம் அஹங்காரப்படுகிறவனே ‘வாலாட்டுகிறான்‘ என்பது வழக்கம்.

English Translation

The ocean-hued lord reserves the six schools of thought for those who do not have the hert to call to him. But if they incur his displeasure, neither their gods nor their prayers will be of any avail.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்