விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வான்உலவு தீவளி*  மாகடல் மாபொருப்பு* 
  தான்உலவு வெம்கதிரும்*  தண்மதியும்*  மேல்நிலவு 
  கொண்டல் பெயரும்*  திசைஎட்டும் சூழ்ச்சியும்* 
  அண்டம் திருமால் அகைப்பு.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மா பொருப்பு - பெரிய குலபர்வதங்களும்
உலவு - திரிகின்ற
வெம் கதிர்தானும் - உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும் - குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு - மேலே நிலாவுகின்ற

விளக்க உரை

பஞ்சபூதங்களும், சந்த்ரஸூர்யர்களும், மேகமண்டலங்களும், ஜீவராசியும், எண்டிசைகளும், ஆவரணங்களும் அண்டமுமெல்லாம் எம்பெருமானுடைய விபூதிகள் என்றாயிற்று. முதலடியில், வான் என்று ஆகாசமும், தீ என்று தேஜஸ்ஸும், வளி என்று வாயுவும், கடல் என்றதனாலே ஜலதத்துவமும், பொருப்பு என்றதனாலே பூமிதத்துவமும் ஆகப் பஞ்சபூதங்கள் பகரப்பட்டன. மூன்றாமடியில் “கொண்டல் பெயரும்“ என்றதை ஒரு சொற் செறிவாகக்கொண்டு ‘மேகமென்று பெயர் பெற்றவையும்‘ என்று முரைப்பர். அகைப்பாவது எழுச்சி, திருவுள்ளத்தில் எழுச்சி (முயற்சி) யாகிய ஸங்கல்பத்தைச் சொன்னவாறு.

English Translation

The sky, the fire, the oceans, the mountains, the Sun and the Moon, the clouds, the eight Quarters, the whole universe, and all that surrounds it, - all these are manifestations of the lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்