விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடிச்சகடம் சாடி*  அரவுஆட்டி*  யானை 
    பிடித்துஒசித்து*  பேய்முலை நஞ்சுஉண்டு*  வடிப்பவள
    வாய்ப்பின்னை தோளிக்கா*  வல்ஏற்று எருத்துஇறுத்து* 
    கோபின்னும் ஆனான் குறிப்பு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சகடம் - சகடாஸுரனை
சாடி - ஒழித்தும்
அரவு - காளியநாகத்தை
ஆட்டி - வாலைப்பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை - குவலயாபீட மென்னும் யானையை

விளக்க உரை

அரவாட்டி – ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க, மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து “க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கி விடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்“ என்ன, அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கி பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்க. அரவு ஆட்டி எனப் பதம் பிரித்ததுபோல “அர வாட்டி“ எனவும் பிரிக்கலாம், “குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனோடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.) அர-காளியநாகத்தை, வாட்டி – வலியடக்கி, என்கை. யானை பிடித்தொசித்து – வில்விழவுக்கென்று கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளின கண்ணபிரான் கம்ஸன் அரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவ்வரண்மனை வாயில் வழியில் தன்னைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதயானை சீறிவர, கண்ணபிரான் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டன்னென்க. பேய்முலை நஞசுண்டு – பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல “பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தன்னென்க. வல்லேற்றெருத்திறுத்து – நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டன்னென்க.

English Translation

He drank the ogress poison breast, smote a cart with his foot, danced on a snake, killed rutted elephant, killed seven bulls for the coral lipped Nappinnai's embrace, and become a king, Note these.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்