விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதைப்பொருள்தான்*  கண்ணன் திருவயிற்றின் உள்ள* 
    உதைப்பளவு போதுபோக்கு இன்றி*  வதைப் பொருள்தான்
    வாய்ந்த குணத்துப்*  படாதது அடைமினோ* 
    ஆய்ந்த குணத்தான் அடி.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாய்ந்த குணத்து - திருக்கல்யாண குணங்களில்
படாதது - ஈடுபடாத வஸ்து
வதை பொருள்தான் - அபதார்த்தமே யாகும்,
ஆய்ந்த குணத்தான் - சிறந்த திருக்குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி - திருவடிகளை

விளக்க உரை

தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஸகல பதார்த்தங்களுக்கும் ஸத்தையை விளைக்கின்ற எம்பெருமானுடைய குணங்களில் ஈடுபட மாட்டாதவர்கள் அஸத்துக்களாவர், அங்ஙனாகாமே நீங்கள் அக்குணநிதியின் திருவடிகளைச் சார்ந்து வாழ்மின் என்று சிலரை நோக்கி உபதேசிக்கும் பாசுரம் இது. கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றினுள்ள – “***“ என்னும் வடசொல்லுக்கு “வாயாற் சொல்லுதல்“ என்று பொருள். நம்மால் வ்யவஹரிக்கப்படுகின்ற பதார்த்தங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீநங்கள் என்கை. உள்ள – உள்ளன என்றபடி. முதலடிக்கு வேறு வகையாகவும் பொருள் கொள்வர். உதைப்பளவு போதுபோக்கின்றி – கண்ணிமைப்பதும் கை நொடிப்பதும் உதைப்பு, ஒரு சிடிகை போடுகிற மாத்திரமான காலம் என்கை. அவ்வளவு காலமும் இடைவிடாமல் – ஸர்வகாலத்திலும் என்றவாறு. அன்றியே, மேலே “அடைமினோ“ என்ற வினைமுற்றோடே இவ்விரண்டாமடியைக் கூட்டியுரைக்கவுமாம், ஒரு நிமிஷ காலமும் தாமதியாமல் விரைந்தடி சேர்மினோ என்றபடி. நிஷத்தின்படியே அபதார்த்தங்களாவர்கள் என்கை. “குணத்துப் படாதவர்“ என்னாமல் “படாத்து“ என்றது பகவத் குணங்களில் ஈடுபடாதவர்களிடத்தில் தமக்குள்ள வெறுப்பினால். அவிவேகிகளை நோக்கிக் “குட்டிச்சுவரே!“ என்பதுபோல. வதை – வசை தகரசகரப்போலி. நீங்களும் அஸத்தாக ஆய்விடாமல் ஆய்ந்த குணத்தானடியை அடைமின் என்று தலைக்கட்டினாராயிற்று.

English Translation

The Whole Universe existed in the stomach of krishna. Those who do not revel in his glory are dead things only. Without wasting a moment of time, attain the feet of the praise worthy lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்