விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உகப்புஉருவன் தானே*  ஒளிஉருவன் தானே* 
    மகப்புஉருவன் தானே*  மதிக்கில்*  மிகப்புருவம்
    ஒன்றுக்குஒன்று*  ஓசனையான் வீழ*  ஒருகணையால் 
    அன்றிக்கொண்டு எய்தான் அவன்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீழ - ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு - சீறிக்கொண்டு
ஒரு கணையால் - ஒரு பாணத்தினால்
எய்தானவன் - அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில் - சிந்தித்தால்

விளக்க உரை

எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார். உகப்புருவன்தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும்படியான திருவுருவத்தை உடையவன் என்கை. “தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற்கமலமன்ன தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மஃதே“ (கம்பராமாயணம்.) என்றது காண்க. அன்றியே, நம்மைப்போல் கருமங்காரமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே “***“ என்கிறபடியே தானே திருவுற்றமுகந்து பரிக்ரஹித்துக் கொள்ளப்பட்ட வடிவையுடையவன் என்றுமாம். ஒளியுருவன் தானே – 1. “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்கிற படியே தேஜஸ்புஞஜமே வடிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன். மகப்புருவன் (மஹாத்புதம்) என்ற வடசொல் “மகப்பு“ எனச் சிதைந்தது, மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி. இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமபிரானென்கிறது பின்னடிகளால். கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி “புருவ மொன்றுக்கொண்றோசனையான்“ என்று அவனுக்குப் பெயரிடப்பட்டது. “யோஜநா“ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது.

English Translation

With his eyebrow-like bow and hot arrows, he killed the mighty fall kumbhakarna. His eyebrows are sweet to contemplate, his face is charming, his frame radiant.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்