விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பன்னிரு திங்கள்*  வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்* 
    என் இளங் கொங்கை*  அமுதம் ஊட்டி எடுத்து யான்*
    பொன்னடி நோவப்*  புலரியே கானிற் கன்றின் பின்* 
    என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் இள சிங்கத்தை - எனது சிங்கக்குட்டி போன்ற கண்ணபிரானை;
பன்னிரு திங்கள் - பன்னிரண்டு மாஸகாலம்;
வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால் - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப;
யான் - (தாயாகிய) நான்;
என் - என்னுடைய;

விளக்க உரை

சக்ரவர்த்தி திருமகனைப்போலவே கண்ணபிரானும் பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறந்தானென்க. இவ்வாறு லோகவிக்ஷணமாகப் பிறந்த பிள்ளையிடத்தில் இதுவே காரணமாக மிகுந்த அன்பை வைத்து அதர்குத் தக்கபடி என்முலைப்பாலை யூட்டிவளர்த்துப் போந்தநான் இன்று காலையில் அவனை யெழுப்பிக் கால்நோவக் கன்றுமேய்க்கக் காட்டில் போகவிட்டேனேயென்று பரிதவிக்கிறாள். கண்ணபிரானை யசோதைப்பிராட்டி மெய் நொந்துபெற்றிலளே யாகிலும் “உன்னையென்மகனே யென்பர் நின்றார்”” என்றபடி ஊரார் இவனை இவள்பெற்ற பிள்ளையாகவே சொல்லிவருகையால் இவளுமதைக்கொண்டு தானே அவனைப் பன்னிருதிங்கள் வயிற்றிற்கொண்டாளாகக் கூறினளெனக்கொள்க. பாங்கு - உரிமை, முறைமை. பிள்ளை முலைநெருடுங்காலத்தில் வரக்கென்றிருக்கை யன்றிக்கே குழைந்திருக்கும்படியைப் பற்ற இளமுலை என்கிறது. எடுத்து+யான், எடுத்தியான்; “உக்குறல்...யவ்வரின் இய்யாம்” என்பது நன்னூல்.

English Translation

By the kinship of bearing him in my womb for twelve months, I brought him up on the nectar of my swollen breasts. Today, I roused my lion-cub early in the morning and sent him after the grazing calves, hurting his tender feet. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்