விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இதுஇலங்கை ஈடுஅழியக்*  கட்டிய சேது* 
  இதுவிலங்கு வாலியை வீழ்த்தது*  இதுஇலங்கை
  தான்ஒடுங்க வில்நுடங்க*  தண் தார்இராவணனை* 
  ஊன்ஒடுங்க எய்தான் உகப்பு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கு -  திர்யக்யோநியிற் பிறந்தவனான
வாலியை - வாலியை
வீழ்த்தது - முடித்தது
எய்தான் - அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது - இப்போது நடந்த செயல்காண்மின்,

விளக்க உரை

விலங்கு வாலியை வீழ்த்தது – ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ்செய்துகொண்டு அவனது நியமனத்தினால் கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைகேட்டு வாலி பொறுக்க மாட்டாதவனாய் வெளிக் கிளம்பிவந்து ஸுக்ரீவனோடு யுத்தஞசெய்யத்தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன் இன்னான் வாலியென்று வாசி கண்டறியாமையால் அம்பு எய்யாதொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல் ரிச்யமூகபர்வத்ததுக்கே மீண்டு ஓடிவந்து சேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி “இப்போது உனக்கு ஒர் அடையாளம் இடுகிறேன், மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை“ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட, ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட, அப்போது அவன் மனைவியாகிய தாரை “ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று, ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும், நீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று“ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தையைச் செவியிலும் கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான், அந்த வாலி ஸுக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர் கீழே தள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில் இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார், அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்துவிட்டான், இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட ஓடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து, அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக் கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துகித்தனள். இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது “ஸுக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக் கொள்ளவேணும்“ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான் – என்ற வரலாறு அறிக. ஆச்ரிதனான ஸுக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால் எம்பெருமான் செய்தருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

English Translation

This is the bridge that the Lord made to destray Lanka. This is where he killed vali. This where he minced the mighty Lanka's king Ravana with his bow.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்