விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மால்தான்*  புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும்* 
    பேறாகக்*  கொள்வனோ பேதைகாள்*  நீறாடி
    தான்காண மாட்டாத*  தார்அகலச் சேவடியை* 
    யான்காண வல்லேற்கு இது.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேதைகான் - மூடர்களை!,
மால் - எம்பெருமான்
தான் புகுந்த - தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம் - (எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும் - வேறொன்றை

விளக்க உரை

தம்முடைய அத்யவாஸாயத்தையும் அதன் அடியையும் அருளிச்செய்கிறார். உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேணுவர், ஐச்வர்யத்தை நச்சுவர் சிலர், ஸ்வரைக்கலோக போகங்களை அபேக்ஷிப்பர் சிலர், கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர். இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேறாக இருக்கும், எனக்கோவென்னில், இவையொன்றும் விருப்பமல்ல. எம்பெருமான்றானே “இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக் கிடைக்குமா!“ என்று காதலித்துத் தன்பேறாக வந்து சேரப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தவிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது, என்று தமது அத்யவாஸாயம் தமக்கு உண்டானபடியைப் பேசுகிறார் பின்னடிகளில், நீறாடிதான் இத்யாதியால். 1. “பெண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப“ என்கிறபடியே சடையன் தானும் நெடுங்காலம் தவம்புரிந்தும் எந்தத் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றிலனோ அந்தத் திருவடிகள் என்க்கு ஸ்வயமாகவே வந்து ஸேவை ஸாதிக்கப் பெற்றதனால் “இத்திருவடி தவிர வேறொன்றும் நமக்கு ப்ராப்யமல்ல“ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டாயிற்று என்றவாறு. “காணவல்ல எனக்கு“ எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து “யான் காண வல்லேற்கு“ எனப் பிரயோகிக்கப்பட்டது.

English Translation

O Foolish people! My heart is set on the Lord alone! Will seek any other reward? I have seen the garland-covered lotus feet of the lord, which even the ash-besmeared Siva cannot, that alone is my reward.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்