விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இவையா! பிலவாய்*  திறந்துஎரி கான்ற* 
    இவையா!*  எரிவட்டக் கண்கள்*  இவையா
    எரிபொங்கிக் காட்டும்*  இமையோர் பெருமான்* 
    அரிபொங்கிக் காட்டும் அழகு?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எரி வட்டம் - கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள் - திருக்கண்கள்
இவையா - இவையோ!
எரி - அக்நிபோலே
பொங்கி - கிளர்ந்து

விளக்க உரை

நரஸிம்ஹாவதாரம் என்றைக்கோ நடந்த்தாயினும் பாவநாப்ரகர்ஷத்தாலே அது ப்ரத்யக்ஷம்போல் தோற்றுமே ஆழ்வார்க்கு, அப்படியே தோற்ற, ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்மேல் எம்பெருமானுக்கு உண்டாகும் சீற்றம் என்ன அற்புதமானது! என்று அநுஸந்தித்து, “எம்பெருமானுடைய தெளிவைக் காட்டிலும் சீற்றமே பக்தர்கட்குச் சரணம்“ என்னுமர்த்தம் விளங்கும்படியாகப் பேசுகிற பாசுரம் இது. திறந்து எரிகான்ற பிலவாய் இவையா! – தூணில் நின்றும் தோன்றினவாறே இரணியன் மேலுண்டான அளவுகடந்த சீற்றத்தினால் திருவாயானது விரிந்து அழலை உமிழ்ந்ததே, அதனைப்பேசுகிறார், நெருப்பைக் கக்கீன திருவாய் இதுதானோ என்கிறார். “கான்ற“ என்ற பெயரெச்சத்தில், கால் – வினைப்பகுதி. காலுதல் வீசுதல். எரிவட்டக்கண்கள் இவையா – 1. “தூயாய் சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம், தாயாயளிக்கின்ற தண்டாமரைக்கண்ணா!“ என்னும்பழ திருக்கண்கள் குளிர்ந்திருப்பது அன்பர்களைக் காணும்போது, அன்பர்க்குத் துன்பம் செய்யுமவர்களைக் காணும்போது கொள்ளிவட்டம்போல் உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே, அப்படி ஜ்வலித்த திருக்கண்களோ இவை!, இத்திருக்கண்களில் இன்றைக்கும் சீற்றம் மாறவில்லையே யென்கிறார்போலும். ஆக முன்னடிகளால், திருவாயும் திருக்கண்களாமாகிற அவயவங்களுக்கு உண்டான விக்ருதியைப் பேசினார். இனி பின்னடிகளால், அவயவியான நரஸிம்ஹமூர்த்தியின் கிளர்ச்சியைப் பேசுகிறார். எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான் – “எரிபொங்கிக்காட்டும்“ என்பதை பெருமானுக்கு விசேஷணமாக்கிப் பதவுரை வரையப்பட்டது. அன்றியே, இமையோர்க்கு விசேஷண மாக்கியும் உரைக்கலாம். ஹோமகாலத்திலே வைதிகர் கொடுத்த ஹவிஸ்ஸை அக்நியானது ஸ்வீகரித்துக்கொண்டு பெரிய கிளர்த்தியோடே போய் ஸமர்ப்பிக்கும்படி யிருக்கிற இந்திரன் முதலிய தேவர்களுக்கு நிர்வாஹகன் என்று பொருளாகும். (எரி – அக்நி தேவதையானது, பொங்கி – கிளர்ந்து, காட்டும் – ஹவிஸ்ஸைக் கொண்டு கொடுக்கப் பெறுகின்ற, இமையோர் என்கை.) நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.

English Translation

The Lord of gods came as a ferocious lion, what a wonder! His gaping mouth spot fire. His red eyes shone like hot embers. What a beautiful form it was!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்