விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வள்ளி நுடங்கு-இடை*  மாதர் வந்து அலர் தூற்றிடத்* 
  துள்ளி விளையாடித்*  தோழரோடு திரியாமே*
  கள்ளி உணங்கு*  வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்* 
  புள்ளின் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளின் தலைவனை - பெரியதிருவடிக்குத் தலைவனான கண்ணபிரானை;
வள்ளி - கொடிபோன்று;
துடங்கு - துவளாநின்றுள்ள;
இடை - இடையையுடைய;
மாதர் - இடைப்பெண்கள்;

விளக்க உரை

வள்ளி - கொடிபோன்று ஒடிந்து விழுகிறாப்போலிருக்கின்ற இடையையுடையா ரென்றபடி. ‘அப்பெண்களென்னிடம் வந்து இவன் செய்த தீம்புகளைச்சொல்லிப் பழிதூற்றா நின்றால், அதனையா இவன் ஏற்றமாகக்கொண்டு மகிழ்ச்சியின் மிகுதியால் தோழருடன்கூடித் துள்ளிவிளையாடுவனே; இவ்வாறான வினோதச் செய்கைகளைச் செய்து திரிய வொட்டாமல் முதுவேனிற்காலத்திலும் பசுகுபசகென்று விளங்கக்கடவ கள்ளிச்செடியுங்கூடப் பால்வற்றி உலரும்படி வெம்மைமிக்க காட்டுவழியில் வருந்தும்வடி அனுப்பிவிட்டேனே! என்று கதறுகின்றனள்.

English Translation

The “king of the birds” would bounce and play with cohorts, and slender-waisted maidens would come running in to complain. Instead I sent him after the grazing calves, down the sizzling forest path, where even cactuses wither. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்