விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முத்தும் மணியும்*  வயிரமும் நன்பொன்னும்*
    தத்திப் பதித்துத்*  தலைப்பெய்தாற் போல்*  எங்கும்
    பத்து விரலும்*  மணிவண்ணன் பாதங்கள்* 
    ஒத்திட்டு இருந்தவா காணீரே* 
          ஒண்ணுதலீர்! வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முத்தும் - முத்துக்களையும்;
மணியும் - ரத்நங்களையும்;
வயிரமும் - வஜ்ரங்களையும்;
நல்பொன்னும் - மாற்றுயர்ந்த பொன்னையும்;
தத்திப்பதித்து - மாறிமாறிப்பதித்து

விளக்க உரை

உரை:1

முத்துக்கள், மாணிக்கங்கள், வயிரங்கள், பொன் என்று மாற்றி மாற்றி பதித்ததைப் போல் உடலெல்லாம் கருமாணிக்கம் போல் நிறம் கொண்ட மணிவண்ணனின் திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் அவன் உடல் நிறத்தை ஒத்து இருப்பதையும் ஒவ்வொரு விரலும் மற்ற விரல்களுக்கு ஒத்து இருப்பதையும் காணுங்கள். ஒளி மிகுந்த நெற்றியை உடையவர்களே பாருங்கள்.

உரை:2

முதலடியில் சில ரத்னங்களைச் சொன்னது நவரத்னங்களுக்கும் உபலக்ஷணம். கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம். கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.

English Translation

Bright forehead Ladies, come here and see the gem-hued Lord’s feet, full with ten little toes like pearls, garnets and diamonds set in gold all over.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்