விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆலநிழற்கீழ்*  அறநெறியை*  நால்வர்க்கு 
    மேலையுகத்துஉரைத்தான்*  மெய்த்தவத்தோன்*  ஞாலம்
    அளந்தானை*  ஆழிக் கிடந்தானை*  ஆல்மேல் 
    வளர்ந்தானைத்*  தான்வணங்குமாறு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெய் தவத்தோன் - மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை - உலகளந்தவனும்
ஆழி அளந்தானை - க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை - ஆலிலே மேல் வளர்ந்தவனுமான பெரானை
தான் வணங்கும் ஆறு - தான் வழிபடும் மார்க்கமாகிய

விளக்க உரை

எம்பெருமானுடைய பரத்துவம் இன்று நான் சொல்லவேணுமா? ஸர்வஜ்னான சிவபிரான் தானே ஸ்வசிஷ்யர்களுக்கு உபதேசித்த விஷயமன்றோ விது என்கிறார். சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஒரு ஆலமரத்தின் அடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தானென்று நூல்கள் கூறும். “ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலம்மர் கண்டத்தரன்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரமுங் காண்க. தாமஸப்ரக்ருதியாய் அஹங்காரிகளில் தலைவனான ருத்ரன் எம்பெருமானுடைய உண்மைநிலையைத் தான் எங்ஙனே அறிதான்? அறிந்தாலும் பிறர்க்கு அதை உபதேசிக்கும்படியான ஹ்ருதய பரிபாகத்தை எங்ஙனே பெற்றான்? என்று கேள்வி கேட்பார்க்கு ஸமாதாநமாகும்படி “மெய்த்தவத்தோன்“ என்ற பெயரால் ருத்ரனைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமானைப் பற்றின தத்துவ்வுணர்ச்சி தனக்கு ஸித்திக்கவேணுமென்று மெய்யே தவம்புரிந்து அத்தவப்பயனாக பகவத் தத்வஜ்ஞாநம் பெற்றவன் என்றபடி. அவன் நால்வர்க்கு உரைத்த அர்த்தம் யாதெனில், (தான் வணங்குமாறு.) “நானும் தலைசாய்க்கப் பெற்ற திருவடித் தாமரைகளையுடையவன் காண்மின் ஸ்ரீமந்நாராயணன், அவன் உலகங்களையெல்லாம் தன் திருவடிக்கீழ் அகப்படுத்திக் கொண்டவன், திருப்பாற்கடலிலே உறங்குவான்போல் யோகுசெய்து கொண்டிருந்து ஆர்த்தரக்ஷணம் செய்தருள்பவன், பிரளய வெள்ளத்திலே நானுமுட்பட ஸகல பதார்த்தங்களும் அழிந்துபோவதா யிருக்கையில் எல்லாவற்றையும் வாரிவிழுங்கி ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்த அற்புத சக்திவாய்ந்த்வன்“ என்று உபதேசிப்பனாம் என்பது பின்னடிகளில் தேறுங்கருத்து.

English Translation

In the yore the great austerity-practising Siva tought this path to the four, -Daksha, Agastya, Pulaslya and Markandeya, -In the shade of a people tree. It was the path of worship of the Lord who measured the Earth and lay sleeping on a fig leaf.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்