விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வீடுஆக்கும்*  பெயாதுற்றிஅறி*  மெய்வருத்திக் 
  கூடுஆக்கி*  நின்றுஉண்டு கொன்றுஉழல்வீர்*  வீடுஆக்கும்
  மெய்ப்பொருள்தான்*  வேத முதற்பொருள்தான்*  விண்ணவர்க்கு 
  நற்பொருள்தான்*  நாராயணன.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மெய் பொருள்தான் - மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள்தான் - வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு - நித்யஸூரிகளுக்கு
நல் பொருள்தான் - போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன் - ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

விளக்க உரை

வேதாந்தங்களில் “***“ (ப்ருஹதாரண்யகம்.) என்று சொல்லப்பட்டுள்ளது, (அதாவது – பிராமணர்கள் யாகஞ்செய்தும் தானஞ் செய்தும் தவம் புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் – என்று ஓதப்பட்டுள்ளது) சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் “அது தப்பிற்று, இது தப்பிற்று“ என்று சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதிற்காட்டிலும், ஸ்ரீமந்நாராயணனையே ஸாகஷாத்தாக எளிதில் வழிபட்டு வாழ்ந்துபோகலாமே என்னுங் கருத்துடன் அருளிச்செய்யும் பாசுரம் இது. அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார் முன்னடிகளால். அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி எளிதாயிருக்கச்செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே! என்கிற இரக்கந்தோன்ற “வீடாக்கும் பெற்றி அறியாது“ என்கிறார். பெற்றி-உபாயம். கூடு ஆக்கி-பறவைகளின் கூடு கொம்புகளாலும் கள்ளிகளாலுமே அடர்ந்திருப்பதுபோல, உடம்பை எலும்பு தவிர வேறொன்றுமில்லையாம்படி உலர்த்தி என்றவாறு. உண்டு- 1. “காயோடு நீடு கனியுண்டு வீடு கடுங்கால் நுகர்ந்து“ என்றும், 2. “வீழ்கனியுமூழிலையும் என்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி“ என்றும் சொல்லுகிறபடிபே தேஹம் தரித்திருக்குமளவு மிதபோஜநம் பண்ணுகிறபடியேச் சொல்லுகிறது. பின்னடிகளில் எம்பெரானுடைய தன்மையை எடுத்துரைத்தது – காயக்லேசரூபமான கருமங்களை விட்டொழித்து “ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே“ என்றிருங்கள் என்றவாறு. “காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதி தேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப், பாயன்முருந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்ற திருவரங்க கலம்பகச் செய்யுள் காண்க.

English Translation

O People who do not understand the real nature of freedom, and go about the practising penance! Know that Narayana is the part and the goal, He is the lord spoken of in the Vedas, and the lord of celestials too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்