விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குறைகொண்டு நான்முகன்*  குண்டிகைநீர் பெய்து*  
    மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி*  கறைகொண்ட
    கண்டத்தான்*  சென்னிமேல் ஏறக் கழுவினான்*  
    அண்டத்தான் சேவடியை ஆங்கு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறை கொண்டு - நைச்யா நுஸந்தானம் செய்துகொண்டு
குண்டிகை நீர் - கமண்டல தீர்த்தத்தை
பெய்து - வார்த்து
மறைகொண்ட - வேதங்களிலுள்ள
மந்திரத்தால் - புருஷஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “இலங்கையையீடழித்த கூரம்பனல்லால் – இலை துணைமற்று“ என்றார். அப்படி சொல்லலாமோ? பிரமன் சிவன் முதலானவர்களையும் துணையாகப் பற்றுகிறவர்கள் இவ்வுலகில் பலருண்டே! என்ன, அவர்களும் தங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீமந்த நாராயணனையே ஆச்ரயித்து அபிமதம் பெற்றார்கள் காண்மின் என்று சொல்லவேண்டி, உலகளந்த காலத்துத் திருவடிவிளக்கின இதிஹாலத்தை யெடுத்துரைக்கிறார் இப்பாட்டில். உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பிரமன் தனது கைக்கமண்டல தீர்த்தத்தினால் விளக்கினான், அது கங்கையாகப் பெருக அதனை சிரஸாவஹித்துப் பரிசுத்தியடைந்தது காரணமாகச் சிவனென்று பேர்பெற்றானொருவன், இனி, துணையாகுந்தெய்வம் இன்னதென்பதை நீங்களே அறிந்து கொள்மின் என்றவாறு. குறைகொண்டு – “நீசனேன் நிறையொன்றுமிலேன்“ என்னுமாபோலே தன்னுடைய குறையை – நைச்சியத்தை அநுஸந்தித்துக்கொண்டு என்றபடி. குண்டிகை – வடசொல் விகாரம். அமரர்க்கு அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்து அக்கடலினின்று தோன்றின காலகூடவிஷத்தைச் சிவபிரான் உட்கொண்டு கழுத்தளவிலே அடக்கிக் கொண்டதுபற்றிக் கறைகொண்ட கண்டத்தான் என்று பெயர் பெற்றனன்.

English Translation

When the Lord stretched the foot into space, there Brahma washed the foot with water from his kamanadalam and offered praise with proper chants. That water fell on Siva's mat-hair and emerged as the holy river Ganga.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்