விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
  படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*
  கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
  இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் பிள்ளையை - என் மகனாகிய கண்ணபிரானை;
வெண்ணெய் - வெண்ணெயை;
மிடறு - கழுத்திலே;
மெழுமெழுத்து ஓட - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி;
விழுங்கி - விழுங்கி விட்டு;

விளக்க உரை

இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே; ஆகையால் அதனை விழுங்குவன் என்க. பலபடிறு செய்கையாவது கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;* பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறுகை. களிறு என்றசொல் எதுகையின்பம் நோக்கிக் கடிறு எனவந்தது; டகரப்போலி; ///////// என்பார் வட நூலார்.

English Translation

My child would gulp butter down his throat and roam this cowherd settlement doing wicked things. Instead I sent him after the grazing calves, with faltering steps down the forest path, where did wild elephants roam. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்