விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேருங்கால் தேவன்*  ஒருவனே என்றுஉரைப்பர்*  
    ஆரும்அறியார் அவன்பெருமை*
    ஓரும் பொருள்முடிவும் இத்தனையே*  எத்தவம் செய்தார்க்கும்* 
    அருள்முடிவது ஆழியான் பால்   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேருங்கால் - “ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று - பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர் - (வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார் - ஒருவரும் அறியமாட்டார்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், ஸ்ரீமந்நாராயண்னையும் நான்முகனையும் சங்கரனையும் பிரஸ்தாவித்தார், மற்றுமு பல தெய்வங்களிருந்தாலும், முழுமுதற்கடவுள் ஸ்ரீமந்நாராயண னொருவனேயாவன், மற்ற தெய்வங்களெல்லாம் என்ற சுருதியின்படி அப்பரம புருஷனுக்கு அங்க பூதங்களேயன்றி வேறில்லை – என்னுமர்த்தத்தை வெளியிடுகின்றாரிதில்-தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸ்ர்வதோமுகை – தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயணஸ் ஸ்ம்ருத“ என்ற பிரமாணத்தைத் திருவுள்ளம்பற்றித் “தேருங்கால் வேனொருவனே யென்றுரைப்பர்“ என்கிறார். என்ற வேதவாக்கியத்தைக் கொண்டு சிவனே பரதேவதையென்று சிலரும் – ஆகவிப்படி பலர் பல தெய்வங்களைப் பேணினாலும் அவையெல்லாம் பூர்வபக்ஷ கோடியிலே நின்று ஸ்ரீமந்நாராயண னொருவனே ஸித்தாந்த கோடியிலே நிற்பன் என்றவாறு. அவன் பெருமை ஆருமறியார் – பரத்வம், ஸௌலப்யம், ஸௌசீல்யம், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம் முதலிய கல்யாண குணங்களினால் அப்பெருமானுக்குள்ள பெருமையை அளவிட்டு அறிய வல்லார் ஆருமில்லை. ஸர்வஜ்ஞனான அந்த எம்பெருமான் தானும் அறியகில்லான் என்றபடி 1. “தாம் தம் பெருமையறியார்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் உணர்க. இப்படிப்பட்ட எம்பெருமானை யடைவதற்கு, கருமம் ஞானம் பக்தி முதலிய உபாயங்கள் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருந்தாலும் அப்பெருமானுடைய திருவருளின்றி எந்த ஸாதநாநுஷ்டானமும் கார்யகா மல்லாமையாலே அவனது நிர்ஹேதுக க்ருபைக் கொண்டே அவன் பெறத்தகுந்தவன் என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளைப் பின்னடிகளில் வெளியிடுகிறார். பகவானைப் பெறுகைக்கு உபாயமாக எப்படிப்பட்ட தபஸ்ஸை அநுஷ்டித்தாலும் அது ஸாகஷாத்தாகப் பலன் பெறுவிக்க மாட்டாது, அப்பகவானுடைய திருவருளே பலனளிக்கவல்லது என்றவாறு. எந்த சாஸ்த்ரத்தை அவிழ்த்துப் பார்த்தாலும் ஸாரார்த்தம் இதுவே விளங்குமென்கிறார் ஓரும் பொருள்முடிவு மித்தனையே என்பதனால், கூரத்தாழ்வா னருளிய வரதராஜஸ்வத்தில் என்ற ச்லோகத்தினாலும் இவ்வர்த்தம் வெளியிடப்பட்டதென்க.

English Translation

Pause to reflect, the Lord is one, they say. His glories are known to none. Even the fourfold pursuits do not reach him. Whatever fruits of penance accrue, they are from the discus-wielder lord alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்