விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அலர்எடுத்த உந்தியான்*  ஆங்குஎழிலஆய,* 
  மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த
  வண்ணத்தான் மாமலரான்*  வார்சடையான்*  என்றுஇவர்கட்கு 
  எண்ணத்தான்ஆமோ இமை? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மா மலரான் - தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான் - நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு - ஆகிய இத்தேவர்கட்கு
இமை - சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ - நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

விளக்க உரை

வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பிரமன் சிவனிந்திரன் முதலானோர்க்கும் சிந்தைக்கும் கோசலமல்ல னெம்பெருமான் என்கிறார். முதலடியிலுள்ள அலர் என்றது தாமரைப்பூவைச் சொல்லுகிறது. எம்பெருமானது திருநாபியில் தாமரைப்பூவுள்ளது ப்ரஸித்தமே. இனி இரண்டாமடியில் மலர் என்றது காயம்பூவைச் சொல்லுகிறது, எம்பெருமானது திருமேனிநிறம் காயாம்பூ வண்ணமென்பதும் ப்ரஸித்தமே. இனி “அலரெடுத்த வண்ணத்தான்“ என்று இந்திரனுக்கு வாசகமானவிதனில் அலர் என்றது காஞ்சிமலரைச் சொல்லுகின்றதென்றுண்ர்க. திருவிளையாடற்புராணம் – திருவாலவாய்க் காண்டம் – தருமிக்குப் பொற்கிழியளித்தபடலத்தல் (ப்னிரண்டாவது செய்யுள்) “செங்கதிர் மேனியான் போல விழ்ந்தன செழும்பலாசம், மங்குலூர்ச் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி, திங்கட் புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மாவம், செங்கையங்கதிராழியான் போல்லர்ந்தன விரிந்தகாயா.“ என்றதில் இரண்டாமடியில் இந்திரனது நிறம் காஞ்சிமலர் நிறமென்று காட்டப்பட்டிருத்தல் காண்க. (மங்குலூர்ச்செல்வன் –மேகாவாஹனனான இந்திரன்) காஞ்சிமலரென்பது கறுத்தபயறு நிறங்கொண்டிருக்குமென்று கூறுவர்.

English Translation

Even the fair-faced indra, the lotus-seated Brahma, and the mat-haired siva cannot comprehend fully the glories of the Lord who has the hue of the lotus and bears a lotus on his navel.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்