விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புகுந்துஇலங்கும்*  அந்திப் பொழுதத்து,* அரியாய் 
    இகழ்ந்த*  இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும் 
    சிந்தப் பிளந்த*  திருமால் திருவடியே* 
    வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தி புகுந்து - ஸாயங்காலமானது வந்துசேர்ந்து
இலங்கும் பொழுதத்து - விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய் - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவ்வதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம் - நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யா ஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து - பலகூறாக வகிர்ந்து

விளக்க உரை

அரியாய் – அரி என்பதைத்தற்சம வடசொல்லாகக் கொண்டால் இரணியனுக்கு அடைமொழியாக அந்வயிக்கும் (வடமொழியில் அரி என்னுஞ்சொல் விரோதியென்னும் பொருளது) பகவத் பாகவத விரோதியாய்க் கொண்டு தூஷித்து வந்த இரணியன் என்றதாகிறது. இனி, சிங்கமென்னும் பொருளதான ஹரி என்ற வடசொல் அரியெனத் திரிந்த்தாகக் கொண்டு ‘நரசிங்க மூர்த்தியாகி‘ என்று எம்பெருமானிடத்து அந்வயித்தலும் பொருந்தும்.

English Translation

As the Sun set, the Lord appeared as a ferocious man-lion and fore into Hiranya's chest with his nails spilling gore everywhere. He then united with the lotus dame Lakshmi. O Heart! Worship and praise his feet alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்