விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்த்துஉணர்வு என்னும்*  ஒளிகொள் விளக்குஏற்றி,* 
    வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே
    நின்றான் இருந்தான்*  கிடந்தான் என் நெஞ்சத்து,* 
    பொன்றாமை மாயன் புகுந்து.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயன் - அப்பெருமான்
பொன்றாமை - குறைவின்றி
என் நெஞ்சத்து - என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து - வந்துசேர்ந்து
மெத்தென - மெதுவாக

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து“ என்றபடியே பலிக்கப்பது போல இருள் தருமாஞாலத்தில் ஒருவராலும் கண்டுபிடிக்கமுடியாத எம்பெருமானாகிற பரம்பொருளை ஞானமாகிற சிறந்த விளக்கின் ஸஹாயத்தினால் தேடிக் கண்டுபிடித்து நெஞசாகிற வலைக்குள்ளே இருத்திவிட்டேன். அப்பெருமான் அவ்விடம் விட்டுப் பெயர்ந்துபோக மாட்டாமையாலே நெஞ்சுதன்னிலையே அவனுக்கு என்னெஞ்சினுள்ளே யாயிற்று என்கிறார். உலகத்திற்காணும் விளகுக்கு எண்ணெய் திரி முதலியவற்றின் சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு, ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கு மென்பதைக்காட்டும் ‘ஒளி கொள்‘ என்ற அடைமொழி. ஊரகமும் பாடகமும வெஃகாவும் பட்டபாடு படுகிறது என்னெஞ்சு என்கிறார்போலும் பின்னடிகளில். பொன்றாமை – நான் நசித்துப் போகாதபடியாக என்றுமாம். ஹ்ருதயத்தினுள்ளே நிற்றலிருத்தல் கிடத்தல்களுக்க விச்சேத மில்லாதபடியாக என்றுமாம்.

English Translation

I brought him into my heart and lit a lamp of consciousness, bowed to him and locked him inside. The wonder Lord entered into my heart without damage, and stood for a while, then sat, then lay down to rest

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்