விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண்உண்டும்*  பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,* 
  வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*  ஆய்ச்சி - கண்ணிக்
  கயிற்றினால் கட்ட*  தான் கட்டுண்டு இருந்தான்,* 
  வயிற்றினோடு ஆற்றா மகன். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேய்ச்சி - பூதனையினது
முலை - (நஞ்சு தீற்றின) முலையை
உண்டும் - அமுது செய்தும்
ஆற்றதாய் - த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய் - வெண்ணெயை

விளக்க உரை

எம்பெருமானுடைய சில லீலைகளை அநுபவித்துப் பேசுகிறார். இதில் “வயிற்றினோடாற்றாமகன்“ என்றருளிச்செய்த அழகை என்சொல்வோம். எத்தனை பொருள்களையிட்டு நிரப்பினாலும் நிரம்பாதே ‘இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ? இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ? என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வயிறாகையாலே அதை வைத்துக்கொண்டு பரிக்கமாட்டாத மகன் என்றவாறு. அவன் இப்படிப்பட்ட வயிறு படைத்தவனென்பது எங்ஙனே தெரிகின்றதென்ன, முன்னடிகளிலருளிச்செய்கிறார். உலகங்களையெல்லாம் அமுதுசெய்து பார்த்தான், அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை, பெற்றத்தாய்போல் வந்தபேய்ச்சியின் பெருமுலையைச் சுவைத்துண்டுபார்த்தான் அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை, ஆய்ச்சிகள் உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயெல்லாம் வாரியுண்டான், ஒன்றிலும் த்ருப்திபெற்றிலன், வெண்ணெய் களவு செய்த குற்றத்திற்காகக் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டதொன்றினால் த்ருப்திபெற்றானத்தனை. கண்ணபிரான் வெண்ணெய் களவுசெய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால்கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிற்றையெல்லாம் துண்டுதுண்டாக அறுத்து வைத்திட்டுப் பின்பே வெண்ணெய் திருடப்போவன், அவன் இவனைப் பிடித்துக்கொண்ட பின்பு துண்டுதுண்டான அக்கயிற்றையெல்லாம் ஒன்றோடொன்று முடிபோட்டு ஒரு தாம்பு வடிவமாக்கி அதுகொண்டு கண்ணனைக்கட்டுவள், ஆனது பற்றிக் கயிற்றுக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான அத்தரம்பினால் தன்னைக் கட்டமுடியாதபடி எளிதில் தன்னைத் தப்புவித்துக்கொள்ள வல்லவனாயினும், தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஆச்ரித பாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்ந்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளினால்தான் அக்குணங்களை விளங்கச்செய்து கொள்ள வேணுமென்று கொண்டு, ஒரு சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொள்வனாதலால் இது தோன்றக் “கட்டுண்டிருந்தான்“ எனப்பட்டது.

English Translation

The Lord who swallowed the Earth, and drank the poisoned breast of the ogress, was still hungry. He ate up all the butter. The angry cowherd-dame Yasoda brought a knotted rope to bind him, and he patiently allowed himself to be bound like a child.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்