விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*
    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணுக்கு இனியானை - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்;
எண்ணற்கு அரியானை - (இத்தன்மையன் என்று) நினைக்கமுடியாதவனாயுள்ள கண்ணபிரானை;
இ பாடி எங்கும் - இத்திருவாய்ப்பாடி முழுவதும்;
பல செய்து - பல (தீமைகளைச்) செய்து (அத்தீமைகளினால்);
வண்ணம் கரு குழல் - அழகிய கறுத்த கூந்தலையுடையரான;

விளக்க உரை

கண்ணுக்கினியானை=எத்தனையேனுந் தீம்பு செய்யிலும் அவன் வடிவழகை நினைத்தால் ‘ஆகிலுங்கொடிய வென்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்’ என்றாற்போல இவனை விடப்போகாதே!’ என்று கருத்து.

English Translation

He is beautiful to behold, he is hard to understand. He would roam this cowherd settlement everywhere doing things that brought dark-coiffured women complaining to me. Instead I sent him after the grazing calves, along the echoing forest path. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்