விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எழில்கொண்ட*  மின்னுக் கொடிஎடுத்து,*  வேகத்-
  தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்,* - எழில் கொண்ட
  நீர்மேகம் அன்ன*  நெடுமால் நிறம்போல,* 
  கார்வானம் காட்டும் கலந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எழில் கொண்ட - அழகையுடைத்தாய்
நீர் - நீர்நறைந்ததான
மேகம் தான் - மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து - அழகிய மின்னற்கொடி படாப்பெற்று
வேகம் தொழில் கொண்டு - வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற

விளக்க உரை

எம்பெருமானுடைய அழகானது ஒருவருடைய பேச்சுக்கு நிலமன்றாகிலும் பேசாதிருக்க முடியாதன்றோ, ‘திருவடி அப்படியிருக்கிறது, திருக்கண் இப்படியிருக்கிறது‘ என்றாற் போலே உவமையிட்டாவது சொல்லிக்கொண்டுதானே யிருக்க வேண்டும், ஆகவே உபமாந முகத்தால் எம்பெருமானது வடிவைப் பேசி அநுபவிக்கிறார் இப்பாட்டாலும் மேற்பாட்டாலும். கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது. கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும். எம்பெருமானுடைய காளமேகம் போன்ற திருமேனியும் மின்னற்கொடி போன்ற பெரிய பிராட்டியாரோடு கூடியும், ஸ்ரீகஜேந்திராழ்வான் போன்ற ஒடித் திரிந்துகொண்டும், ‘ஆணைவரும் பின்ன மணி யோசைவரும் முன்னே‘ என்கிறாப்போலே அன்பர்களிடம் தான் வருவதற்க முன்னமே அறிகுறியாக முழக்கத்தைச் செய்து கொண்டிராநின்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடைத்தாகியுமிருக்கும். ஆகவே இங்குச் சொன்ன உபமாசோபமேயபாவம் நன்கு பொருந்துமென்க. மின் + கொடி, மின்னுக்கொடி, புணர்ச்சியில் உகரச்சாரியை பெற்றது. ‘மின்னலைக் கொடியாக வெடுத்து‘ என்றும் பொருள் கொள்ளலாம். முதலடியில் “எழில்கொண்டு“ என்ற (வினையெச்சமான) பாடம் பெரும்பான்மையாக வழங்கிவந்தாலும் அது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கு இணங்காது, “எழிலை யுடைத்தான மின்னை“ என்பது வியாக்கியான வாக்கியமாதலால் “எழில்கொண்ட“ என்ற (பெயரெச்சமான) பாடமே பொருந்தும்.

English Translation

The Lord who battled fiercely with seven black bulls for the sake of Nappinnai looked like the dark radiant rain-cloud lit by its lightning. Charging against other dark clouds in the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்