விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கவியினார் கைபுனைந்து*  கண்ஆர் கழல்போய்,* 
    செவியின்ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* - புவியினார்
    போற்றி உரைக்க*  பொலியுமே,*  பின்னைக்குஆய்
    ஏற்றுஉயிரை அட்டான் எழில்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கவியினார் - தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க்கொண்டு
கை புனைந்து - அஜ்ஞலிபண்ணி
கண் - தமது கண்கள்
ஆர் கழல் போய் - (அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய் - காது நிறைந்த கேள்விகளையுடையராய்க் கொண்டு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “மாயவனை யாவரே கண்டார்“ என்று பரம்பொருளை உள்ளபடியே காணப்பெற்றாராருமில்லை யென்றார் உள்ளபடியே பேசப்பெற்றவர்களாவது உண்டோவென்ன. இப்பூமியிலுள்ளாரடங்கலும் ஒன்று கூடிப் பேசினாலும் சிறப்புறப்பேசித் தலைக்கட்டலாம்படி யிராது எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்கள் என்கிறாரிதில். வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக்கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும் செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும் இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்றுசேர்ந்து போற்றியுரைத்தாலும், கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.

English Translation

Even if all men become poets, possess all the lerning in the world, to the Lord with flowers in their hands, and love in their eyes and offer their poetry of praise, the Lord's glory will only increase. He killed seven bulls for the love of Nappinnai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்