விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*
    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாடியில் - திருவாய்ப் பாடியில்;
பற்று மஞ்சள் பூசி - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனியெங்கும் பெண்கள் கையால் தனித்தனியே) பூசப்பெற்று;
சிற்றில் சிதைத்து - (அப்பெண்கள்  இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி);
எங்கும் - எல்லாவிடங்களிலும்;
தீமை செய்து - தீம்புகளைச் செய்து கொண்டு;

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக் கண்ணபிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப்பார்ப்பார்களாம்; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. [கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால் கண்ணபிரானுடைய பொன் போல் மஞ்சனமாட்டின மேனி நிறம் மழுங்குமேயென்று வயிறெரிகின்றனள்.

English Translation

With bath-turmeric smeared all over, he would go around kicking the sand castles of girls, and make mischief everywhere. Instead, I sent him into the hunter’s forest covering him with the dust of grazing calves. O why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்