விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
  மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*
  கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
  என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அஞ்சனம் வண்ணனை - மைபோன்ற நிறத்தையுடையனும்;
ஆயர் கோலம் - இடைக்கோலம் பூண்டுள்ளவனும்;
கொழுந்தினை - (அவ்விடையர்க்குத்) தலைவனும்;
பிள்ளையை - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை;
மனைகள் தொறும் - (தன்வீட்டிற் போலவே) அயல்வீடுகள் தோறும்;

விளக்க உரை

ஆயர்கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகியகொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்; வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்துபோலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவுவந்தால் முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படியிருத்தலால் கொழுந்தெனப்பட்டான். “மஞ்சனமாட்டி” என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும். கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய பாவியேனுடைய பாவநினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள். கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.

English Translation

My dark hued Lord and master of the cowherd clan would have his bath, then go roaming from house to house. Instead I sent the child after the calves, hurting those tender feet that smote Kamsa. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்