விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மலைமுகடுமேல் வைத்து*  வாசுகியைச் சுற்றி,* 
  தலைமுகடு தான்ஒருகை பற்றி,*- அலைமுகட்டு  
  அண்டம்போய் நீர்தெறிப்ப*  அன்று கடல்கடைந்தான்,* 
  பிண்டமாய் நின்ற பிரான்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தலை முகடு - அதன் தலைப்பாகத்தை
தான் ஒரு கைபற்றி - தான் ஒரு கையாலே பற்றிக்கொண்டு
அலைநீர் - அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப - அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான் - கடலைக்கடைந்தான்.

விளக்க உரை

பிரயோஜநரந்தரத்தை விரும்புவர்க்கும் உடம்பு நோவக் காரியஞ்செய்து பயனளிப்பவனெம்பெருமான் என்கிறார். துர்வாஸமஹர்ஷியின் சாபத்தினால் தேவர்களின் செல்வம் யாவும் ஒழியவே இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாகநாட்டி வாஸுகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறாக்பூட்டிப் பாற்கடலைக் கடைகையில் மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின்கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளிருந்து, இப்படியிருக்கையில் வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் அதனை வலியப் பிடித்திழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனித்தரித்து அசுரர்கள் பக்கத்திலும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்துவலமும் இடமுகமாக இழுத்துக்கடைந்த வரலாறு அறிக. அப்போது கடைகிற வேத்தாலே அலைநீர்த்திவலைகள் அண்டம் போய்த் தெறித்தனவென்கிறார். பிண்டமாய் நின்ற பிரான் –மண்ணுண்டையானது பல காரியப் பொருள்களாக ஆகி, பானை யென்றும் மடக்கென்றும சால் என்றும் பலவடிவுகளை அடைவதுபோல, எம்பெருமானும் ஸகல ஜகத்துக்கும் உபாதாநகாரணமாயிருத்தல்பற்றிப் பிண்டமாய் நின்ற என்கிறார். ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டனாயிருந்தபடியைச் சொல்லிற்றென்க.

English Translation

The Pearly sea was churned by the Lord himself. He came as a tortoise and supported in the mount, drawn back and forth by the snake vasuki, sending waves that reached the ends jkof the universe, The Lord stood firm like a rock.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்