விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன்என்றும்
    உளன்கண்டாய்,*  உள்ளுவார்உள்ளத்து உளன்கண்டாய்,*
    விண்ஒடுங்கக் கோடுஉயரும்*  வீங்குஅருவி வேங்கடத்தான்,*
    மண்ஒடுங்க தான்அளந்த மன்.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உயரும் - உயர்ந்தோங்கி யிருக்கப்பெற்றதும்
வீங்கு அருவி - நிறைந்த அருவிகளையுடையதுமான
வேங்கடத் தான் - திருமலையில் எழுந்தருளியிருப்பவனும்
மண் - பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க - (திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி

விளக்க உரை

இப்படி ஸர்வாதிகனான எம்பெருமான் நம்மிடத்து வந்து புகுந்த பின்பு, நெஞ்சே! நமக்கு ஒரு குறையுமில்லைகாண் என்கிறார். நம்முடைய ஸத்தையை நோக்குவதற்காகவே தான் ஸத்தை பெற்றிருக்கின்றான், ‘எம்பெருமானுளன்‘ என்று நாம் இசைந்தாலும் இசையாவிட்டாலும் எப்போதும் நம்முடைய ரக்ஷணத்திலே முயன்று உளனாயிருக்கின்றான், இதற்குறுப்பாகத் திருவேங்கடமலையிலே வந்து தங்குமவன், இக்குணங்களையெல்லாம் த்ரிவிக்ரமாவதாரத்தில் விளங்கக் காட்டினவன்.

English Translation

O Good Heart of mine! Know that the Lord exists, -now and forever. The lord who resides in the tall sky-touching hills of Venkatam, and who rose tall to measure the Earth, resides in the hearts of his devotees, -then, now and forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்